News Update :

Wednesday, July 8, 2020

TamilLetter

சட்டத்தரணி ஹரிஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

என் அன்பு உடன் பிறப்புக்களே அஸ்ஸலாமு அலைக்கும்


பௌத்த மேலான்மைவாதம் நாடு பூராகவும் தலைதூக்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு பொதுத் தேர்தலை நாம் சந்தித்து கொண்டிருக்கின்றோம்.
பெரும்பான்மை சமூகத்தினருக்கு மத்தியில் ஜனாநாயத்தை தாண்டிய ஆதிக்கவாதம் இயல்பாகவே வேரூன்றியுள்ளதால் தேர்தல்கள் அவர்களை ஒரு போதும் திகைப்பில் ஆழ்த்துவதில்லை. அதற்கு மாறாக சிறுபான்மை முஸ்லிம் சமூகம் வாக்கு எனும் கூரிய ஆயுதத்தை பயன்படுத்துவதன் மூலமே வீரியத்துடன் நாம் எழுந்து நிற்க முடியும் என்பதில் எனது பலமான நம்பிக்கை.

முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக ஒரே நேர் கோட்டில் பயணிக்க வேண்டுமென்பதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதும் பதவி மற்றும் சுகங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக புறப்பட்ட ஒரு சிலரால் அவரின் இந்த முயற்சி பலனின்றி போனது.
இருந்த போதும் சட்டத்தரணி ஹரிஸ் அவர்களினது சமூக ஒற்றுமைக்கான பயணம் தடைப்பட்டிருந்தாலும்  மக்களாகிய நாங்கள் ஒரு போதும் அவரின் தூர நோக்கான சிந்தனைகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளித்தே வருகின்றோம் என்பதற்கு மக்களின் ஆதரவுத்தளம் புடம் போட்டு காட்டுவது மிக மகிழ்ச்சியான விடயமாகும். 
முஸ்லிம் தாயகம்இமுஸ்லிம் தேசியம் மற்றும் அரசியல் உணர்வுகளை இன மேலாதிக்க கருத்தியல் மூலம் துடைத்தெறிவதற்கான வேலைத்திட்டம் அதிகார வர்க்கத்தினால் ஏற்னவே அழகாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. 

அத்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நம் மத்தியிலுள்ள சில அரசியல் வாதிகள் அவர்களோடு கைகோர்த்து செயற்படுவது பெரும் மனவேதனையை தருவதோடு நமது சமூகத்தின் வீழ்ச்சிக்கான தொடக்க புள்ளியாக அது உருமாறியுள்ளது. 
இலங்கை முஸ்லிம்களுக்கு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருந்து வருகின்ற அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து எம்மை பலவவீனப்படுத்துவதன் மூலம் எமது தேசிய அடையாளத்தை இழக்கச் செய்வதே தேசியஇசர்வதேச சதி முயற்சியாகும்.

இப்படியான களச்சூழ்நிலையில் அம்பாரை மாவட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டமாகவே இத் தேர்தலை நாம் உற்று நோக்க வேண்டும்.
அந்த வகையில் நமது சமூகத்தின் எதிர்கால இருப்பை தக்கவைப்பதற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் நமது சமூகத்தின் நலனுக்காக களத்தில் நேரடியாக நின்று துணிவுடன் செயற்பட்ட ஒரு ஆளுமைமிக்க நபராக சகோதரன் ஹரிஸ் அவர்களை நான்  இங்கு காண்கின்றேன்.

சட்டத்தரணி ஹரிஸ் பிரதேசங்களை தாண்டிய சமூகத்தலைவராக தன்னை தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றார் என்பதற்கு திகன கலவரம்இஅம்பாரை பள்ளி உடைப்புஇஅளுத்கம பிரச்சினைஇ ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாட் பதியூதீன்இஆசாத்சாலி போன்றவர்கள் பதவி விலக வேண்டுமென்ற பௌத்த தலைவர்களின் கோரிக்கை என முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து பிரச்சினைகளின் போதும் தனிநபராக களம் கண்டு; போராடியவர் என்பதற்கு மக்களாகிய நீங்களே சாட்சியாவீர்.
எனவே இப்படியான ஆளுமையான சமூக சிந்தனையுள்ள ஊழலற்ற செயல் வீரன் சட்டத்தரணி ஹரீஸ் அவர்களை கட்சி அரசியலுக்கப்பால் வெற்றி பெற வைப்பது ஒவ்வொரு முஸ்லிம்களுடைய கடமையாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆகவே சட்டத்தரணி ஹரீஸ் அவர்களின் தொலைபேசி சின்னத்துக்கும் ஒன்பதாம் இலக்கத்திற்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்து நமது அடையாளத்தையும் நமது கௌரவத்தையும் பாதுகாப்போம்

- ஏ.எம்.பைறூஸ் 
- கல்முனை மாநகர சபை உறுப்பினர். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-