News Update :

Tuesday, October 8, 2019

TamilLetter

சஜீத்துக்கு ஆதரவு வழங்கும் ரவூப் ஹக்கீம் பற்றி - பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல்

ஊடக அறிக்கை

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமானது ஜனாதிபதி முறைமை என முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை கொள்கையாக இருக்கும் நிலையில் ரணிலின் தேவைக்காக ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மீண்டும் ரணிலோடு  ரவூப் ஹக்கீம் கூட்டுச் சேர்ந்திருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும்  தொடர்ச்சியான துரோகமாகும்.

2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி முறைக்கு எதிரான ரணிலின் கோசத்துக்கு ஹக்கீம் இணங்கியதோடு மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கையை தூக்கி ஆதரவளித்து சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமையை செயழிலக்கச் செய்தார்.

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவர் என்று முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கூறிய போது அதை எதிர்த்து நின்ற ஹஸனலிக்கும் பஷீர் சேகுதாவூத்துக்கும் அவரின் கூற்றை விளங்கிக் கொள்ள 18 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

தலைக்கு மேல் வெள்ளம் போன பிற்பாடுதான் அவர்கள் விழித்துக் கொண்டு தலையில் கைவைத்துக் கொண்டு ரவூப் ஹக்கீமுக்கு எதிராக இன்று பிரச்சாரம் செய்து வருகின்றார்.

மஹிந்தவை எதிர்ப்பதும் மீண்டும் அவருடைய அரசாங்கத்தில் அமைச்சராக ஒட்டிக் கொள்வதும் ரவூப் ஹக்கீம் போன்றவர்களுக்கு  புதிய விடயமல்ல  அவரின் கபட நாடகத்தினால்தான் முஸ்லிம்களின் மீது நம்பிக்கை இழந்தவர்காளாக பெரும்பான்மை சமூகம் காணப்படுகின்றது.

பெருந்தலைவர் அஷ்ரப்பின் மறைவுக்கு பிற்பாடு பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் தீர்மானங்களுக்கு எதிராக முஸ்லிம்; சமூகத்தை பிழையாக வழிநடாத்த தனது சுகபோகங்களை அனுபவித்து வந்துள்ளார் ரவூப் ஹக்கிம்.

2001ம் ஆண்டு ரணிலை பிரதமராக கொண்டு வருவதற்கு சந்திரிக்காவுக்கு எதிராக சூழ்ச்சி செய்த போது சந்திரிகா இவரின் அமைச்சுப்பதவியை பறித்து வெளியேற்றிய போது எமது தலைவர் இவருக்காக தனது அமைச்சுப் பதவியை இராஜீனமா செய்தது முஸ்லிம் காங்கிரஸின் வராலாற்று பதிவுகள்.

அதனைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு ரணிலை ஆதரித்து விட்டு மஹிந்தவின் அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு விட்டு 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மஹிந்தவை விட்டு பிரிந்து சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்து சர்வதேச நாடுகளின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

அத் தேர்தலில் சரத் பொன்சேக்கா 19 இலட்சம் வாக்குகளால் தோல்வியைத் தழுவியதுடன் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக மீண்டும் ஜனாதிபதியானார்.

மஹிந்தவின் அரசாங்கம் இன்னும் ஆறு வருடங்கள் தொடரப் போகின்றது இக்காலம் நீண்ட காலமாகவுள்ளதால் அதுவரைக்கும் தன்னால் எதிர்க்கட்சி அரசியல் செய்ய முடியாது என்பதோடு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமான முறையில் மஹிந்தவோடு இணைந்து கொள்வதற்கு பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று உணர்ந்த ஹக்கீம் இவர்களுக்கு முந்திச் சென்று மஹிந்தவின் காலைப்பிடித்து மீண்டும் அமைச்சரானார்.

ரவூப் ஹக்கீம் அமைச்சை பெற்றுக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது எக்காரணம் கொண்டும் நானும் எனது கட்சியும் மஹிந்த ராஜபக்ஷவை விட்டு ஒரு போதும் பிரியமாட்டோம் என்று கூறினார் ரவூப்

இதே போல் 20015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ரவூப் ஹக்கீம் அவர்கள் நாங்கள் மஹிந்தவுக்கே ஆதரவளிப்பதாக இறுதி நிமிடம் வரை நம்பிக்கையூட்டி வந்தார். தபால் வாக்குகள் வரைக்கும் ஏமாற்றிய ஹக்கீம் தமிழ் தேசிய வாதிகளோடு இணைந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தார்.

மஹிந்தவை சிறுபான்மை சமூகங்கள்தான் தோற்கடித்து இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவினோம் என மார்தட்டிய ரவூப் ஹக்கீம் அடுத்த சில மாதங்களில் நல்லாட்சியின் ஜனாதிபதியை ரணிலோடு இணைந்து கொண்டு எதிர்க்க ஆரம்பித்தார்.

ஆனால் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நன்றாக பயன்படுத்திய தமிழ் தேசியவாதிகள் அவர்கள் இழந்த ஆயிரக்கணக்கான நிலங்களையும்,அரசியல் கைதிகளையும மீட்டதோடு பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் தமது பிரதேசத்தில் ஏற்படுத்தினர்.

முஸ்லிம்களின் காணிகளை மீட்போம்,கரையோர மாவட்டத்தை பெறுவோம்,கல்முனையை வர்த்தக மையமாக்குவோம்,சாய்ந்தமருதுக்கு நகர சபையை பெற்றுக் கொடுப்போம்,வாழைச்சேனை தோப்பூர் ஆகிய பிரதேசங்களுக்கு தனியான பிரதேச சபைகளை பெற்றுக் கொடுப்போம் என கூறிய ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களுடைய ஒரு இஞ்சி நிலத்தையாவது பெற்றுக் கொடுத்தாரா?

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் எதிராக செயற்படுகின்றது என்று பகிரங்கமாக கூறியதோடு தயாகமகேயால்  மாணிக்கமடுவில் வைக்கப்பட்ட சிலையை ஒருமாத காலத்திற்குள்அகற்றுவேன் என்று கூறியதை நம் மக்கள் மறந்து விட்டார்களா?

பொத்துவில் பிரதேசத்திற்கு சென்று கடல் நீரை குடிநீராக்குவேன் உங்கள் காணிகளை ஒருமாத காலத்திற்குள் மீட்டுத்தருவேன் என மேடை போட்டு கூறிய ஹக்கீமின் வாக்குறுதிகள் என்னவாயிற்று.மண்மலையால் மக்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதோடு பெண்கள்,தாய்மார்கள் வீதியில் நின்று கண்ணீர் வடிக்கின்றனர்.பிரதேச சபையும் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதோடு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர் இவர்களால் இப் பிரச்சினையை தீர்க்க முடிந்ததா?

எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சஜீத்தை வெல்ல வைக்கப் போகின்றோம் என ஹக்கீம் கூறுகின்றார்.அவரின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இது முட்டாள்தனமான முடிவு என அறிக்கை விடுகிறார்.இதுதான் முஸ்லிம்களின் நிலமை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-