News Update :

Tuesday, February 5, 2019

TamilLetter

அதாஉல்லாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திரைப்பட நடிகர் வடிவேல் - சமூக ஊடகங்களிலிருந்து

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல்ல..

எதிர் கட்சி நாதாரிகளை பார்த்து ஒண்ணே ஒன்னு கேக்குறேன்
சுதந்திர தின விழா நடத்துறியா? அராஜகம் நடத்துறியா?
என்ன பண்ணினான் என் தலைவன்.
என்னய்யா தப்பு பண்ணினான்?

எதோ ஒன்னு ரெண்டு அரசியல் பேசினான்.
அரசியல்லுன்னா வாழ்த்திட்டு விட்டுற வேண்டியதுதானே ..
அதான்னைய்யா உலக வழக்கம்

அதை விட்டுட்டு, 50 பேர் மேடைக்கு முன்னாலும் பின்னாலும் நின்று என் தலைவனை பேச விடாம ஊத்த பேச்சால தொவை தொவைன்னு தொவச்சிருக்கீங்க


 அட ஏசினாலும் பரவாயில்லைய்யா!!!
போற வார சின்னப்பயலையெல்லாம் விட்டு புத்திமதி சொல்லி கலாய்ச்சு பழகிக்கங்கடான்னு அசிங்கப்படுத்தி இருக்கீங்க!!
பழகுறத்துக்கு இதென்ன பள்ளிக்கூடமா
ஏதோ என் தலைவன் பாடியில எனர்ஜி இருந்ததால எஸ்கேப் ஆகியிருக்கான்யா

ஒண்டு கணக்கு ஒன்னு ஆகியிருந்தா இந்த கட்சியை யாரு காப்பாத்துறது, அந்த மைக்க வெச்சு யாரு மெயின்டைன் பண்ணுறது

இவ்வளவு ஏன் வன்னியிலே கூட இப்பிடி ஒரு சம்பவம் நடந்திருக்கு
இதே என்தலைவன் “ஒரு லெச்சத்தி முப்பத்தி நாப்பத்தி” என்று ஏதோ உளறின போது கூட ஒரு கட்சிக்காரன் அலேக்கா கொண்டு போய் meme போட்டு செம்மய்யா கலாய்ச்சு ஸ்டேட்டஸ் அடிச்சான்

ஆனா அவன் இந்தளவுக்கு இம்சை படுத்தல்ல
ஒரு, ரெண்டு மூணு நாள் வெச்சு meme ஸ்டேட்டஸ் அடிச்சிட்டு அனுப்பிட்டான் .
அதுவும் எப்படி?
பிள்ளைக்கு வலிக்க கூடாது என்பதறகாக மானே, தேனே, பொன்மானே என்று போட்டு கலாய்ச்சு meme ஸ்டேட்டஸ் அடிச்சிருக்கான்.
அந்த நாகரீகம் கூடவா உனக்கு தெரியாது
என்னா ஏச்சு!!!
பச்சை தண்ணி கூட கொடுக்காம மைக்கை பறிச்சு சுத்தி நின்னு கத்தி இருக்க நீயி
எப்படியெல்லாம் முக்கி முக்கி கதைச்சான் என் தலைவன்
இரக்கம் இல்லையா உனக்கு

வேணாம், எங்க கிட்ட வேணாம் “ரணில்ட பஸ்,டயஸ்போரா, வெளிநாட்டு சதி” இதுகள தவிர அரசியல் கதைக்க எங்க தலைவனுக்கும் தெரியும்
ஆனா என் தலைவன் கதைக்க மாட்டான் , கதைக்கவும் தெரியாது ,
ஒண்ணே ஒன்னு எச்சரிச்சுக்கிறேன்

என் கட்சித்தொண்டனின் காலிலே இருக்கிற சுண்டு விரலில், குண்டுமணியளவேனும் ரெத்தம் வந்தாலும் சரி
எதிர்கட்சிக்காரனின் தலை தோரணம் கட்டி தொங்க விடப்படும் என்பதை எச்சரித்து கொள்கிறேன்

இப்படிக்கு
வண்டு முருகன்
எழுத்தாளர்
கடிதத்துறை அமைச்சு
Letter சம்மேளனம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-