News Update :

Tuesday, August 15, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கை கண்டிக்கும் தமிழ் எம்.பி


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் சிறுபாண்மை சமூகங்களுக்கிடையே இனவாதக் கருத்தை விதைத்து மக்களிடையேயும், இனங்களுக்கிடையேயும் இனமுறுகலை தோற்றுவிப்பதை நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,பட்டிருப்பு தொகுதியின் தமிழரசுக்கட்சியின் அமைப்பாளருமான  பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

"தமிழர்களின் கையிலே நிருவாகம்,அரசியல்  தலமைத்துவமும் செல்லுமாயின் முஸ்லிம்கள் கைகட்டி சலுகைகளை பெறவேண்டிவரும்" என பத்திரிகையில் வெளிவந்த செய்தி சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையிலே மேலுள்ளவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:- "

சகோதர முஸ்ஸிம்களின் கையிலே நிருவாகமும்,அரசியல் தலமைத்துவமும் செல்லுமாயின் தமிழ் தலமைகளும்,தமிழர்களும் அடிமையாக செயற்பட வேண்டியேற்படும்" என்று தமிழர்களும்,தமிழ்த்தலமைகளும் ஒருநாளும் நினைக்கவும் மாட்டார்கள் அதேபோன்று இனவாதக் கருத்தை தெரிவிக்கவும் மாட்டார்கள்.இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அறிவுபூர்வமாக உணர்ந்து செயற்பட வேண்டும்.

சுமார் அறுபது வருட காலமாக தமிழர்கள் ஆயுதரீதியாகவும்,அஹிம்சை ரீதியாகவும் போராடியவர்கள்.பல போராட்டங்களை தியாக மனப்பாங்குடன்  முன்னெடுத்து பல்லாயிரக்கனக்கான உயிரிழப்புக்களையும்,சொத்துச்சேதங்களையும் இழந்த சமூகம் தமிழ் சமூகமாகும்.அத்துடன் தமிழர்களின் தன்மானம்,கல்வி,பொருளாதாரம்,உட்கட்டமைப்பு,மனிதவளம்,கற்பு,போன்றவற்றை இழந்த சமூகமாக தமிழ் சமூகம் காணப்பட்டது.தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு கடந்தகால அரசாங்கங்கள் தீர்வு பெற்றுத்தரவில்லை.ஆயுதப்போராட்டாம் மௌனித்தது.இன்று தமிழர்களின் பிரச்சனை,அடிப்படைத்தேவைகள்,தமிழர்களுக்கான சுய உரிமை, தேசியரீதியில் முழங்கிக் கொண்டு இன்று சர்வதேச நாடுகள் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கத்தை பணித்திருக்கின்றது.இவ்வாறு இருக்கும்போது சிறுபாண்மை சமூகத்தில் இனவாதக்கருத்தை தெரிவிப்பது தமிழர்கள் அச்சமடைகின்றார்கள்.தந்தை செல்வா காலத்தில் இருந்து வடகிழக்கில் தமிழ்,முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இணைந்து ஒரு சமூகமாக வாழ்ந்துள்ளார்கள்.தமிழ்,முஸ்லிம் உறவைப்பிரிக்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் குறுகிய சிந்தனையுடன் இக்கருத்து மூலம் அறிய முடிகின்றது.இதனால் தமிழ்மக்களின் மனதை மாகாண சபை உறுப்பினர் புண்படுத்தியுள்ளார்.இது கண்டிக்கதக்கதாகும்.மாகாண சபையின் அதிகாரத்தில் பதிமூன்றாவது சீர்திருத்தச்சட்டம் கொண்டுவருவதற்கும்,அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் காரணம் சிறுபாண்மை சமூகங்களின் ஒற்றுமையின்மையே பிரதான காரணமாகும்.எனவே வடகிழக்கில் உள்ள தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் செயற்படுத்துவதன் மூலமே முறையாக பதிமூன்றாவது சீர்திருத்தத்தை அமுல்படுத்த முடியும்.ஷிப்லி பாறூக்  அவர்கள் இனவாதத் கருத்தை கைவிட்டு தமிழ் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை தவிர்த்து நல்லிணக்கத்தையும்,சமத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டும்.இணைந்த வடகிழக்கில் இனவிரிசலையும்,இனவாதத்தையும் தவிர்த்து இனங்களுக்கிடையே சமாதானத்தையும், சமத்துவத்தையும் கட்டியெழுப்பி வடகிழக்கில் தமிழ்மொழி பேசுபவர்களுக்கு சுயமாக வாழக்கூடியதும்,சுயஉரிமையுடன் கூடிய சமஸ்டி தீர்வுக்கு இனவாதக்கருத்தை தமிழ்மக்களிடையே விதைப்பதை அவர் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்.

2015 ஆம் ஆண்டளவில் நடைபெற்று முடிந்த தேர்தலிலே "மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் பேசிய இரண்டு வேட்பாளர்கள் பொதுமக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்" எனும் கருத்தை ஷிப்லி பாறூக் தெரிவித்தார். அன்று அவர் இனவாதம் பேசவில்லை.ஆனால் இன்று ஷிப்லி பாறூக் இனவாதம் பேசுபவது.தமிழ்மொழி பேசுபவர்களின் மத்தியில் ஒர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.இப்படி ஷிப்லி பாறூக் இனவாதம் பேசினால் முஸ்லிம்கள் முஸ்லிம் பொதுமக்களால் நிச்சயமாக நிராகரிக்கப்படுவார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையே எனத் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-