News Update :

Thursday, July 20, 2017

TamilLetter

முதலமைச்சரின் மருமகனின் ஊழல் !


முதலமைச்சரின் மருமகனின் ஊழல் !

மட்டக்களப்பு அரசாங்க அதிபர்  மற்றும் அரச அதிகாரிகள்  ஊழல் செய்யவில்லை என அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரது ஊழல் மோசடிகள் வெளியாகியுள்ளது.
 எஸ் எம் அல் அமீன்
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகிய  எஸ் எம் அல் அமீன் அவர்கள் கோரளைப்பற்று மத்தி ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் மிகவும் கண்ணியம் மிக்க பதவியை உடையவர் ஏறாவூர் நகரத்தில் வசிக்கும்   இவர்தான் குறுந்தகவல் மூலம் எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்த தகவல் அனுப்பியவர்.
இவரின் ஊழல் மோசடி 2016 ஆம் ஆண்டு மலேசியவிற்கு புலமைப்பரிசில் சென்று பயிற்சி பெற்று அரச சேவைகளை வழங்க நாடுதிரும்பிருந்தார்.
இவர் தனது வெளிநாட்டு பயணத்திற்கான அனுமதியை உரியமுறையில் பெற்றுக்கொள்ளவில்லை இவர் முறையற்ற விதத்தில் அரசாங்க பணத்தை செலவு செய்து வெளிநாடு சென்றார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நிருபிக்கப்பட்டவர் .
 இவருக்கு திறைசேரியினால் வழங்கப்பட்டு செலவு செய்யப்பட்ட நிதி ரூபாய் 800000.00 ஆகும்.  
மேற்படி மோசடி நிருபிக்கப்பட்டு எட்டுலட்சம் திறைசேரிக்கு செலுத்துமாறும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு கிடைக்கும் எந்தவித நன்மையும் எதிர்காலத்தில் கோரமுடியாது என குறிப்பிட்டு இவருக்கு  திறைசேரியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு திறைசேரிக்கு இவரினால் பணமும் மீள செலுத்தப்பட்டுள்ளது .
 எட்டுலட்சம் திறைசேரி நிதியை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடி செய்து குற்றத்தை ஏற்றுக்கொண்டு
மீளவும் பணம் செலுத்திய இவர் அரச அதிபர் ஊழல் செய்யவில்லை என போராடுவது
ஊழல் வாதிகள் ஒருவரை ஒருவர் காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்பது தெளிவாகிறது.
இவர் அரச அதிபரின் மோசடிகளை மூடிமறைக்க அரச உத்தியோகத்தர்களை கடமை நேரத்தில் ஆர்பாட்டத்திற்கு அழைத்தது மற்றுமொரு ஊழல் மோசடி தங்களது சொந்த தேவைக்காக அரச அதிகாரிகளை பயன்படுத்தியதுடன்   மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் அதற்கு பதில் வழங்காது அதற்கு எதிராக அரச அதிகாரிகளை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் புதிய அச்சுறுத்தும் நடைமுறையை மட்டக்களப்பில் அறிமுகம் செய்துள்ளனர்.
அடுத்த ஊழல் வாதியும் கிழக்கு முதலமைச்சரின் மருமகனுமான எம்.ஐ.எம்.இஷாக்!
 ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் தலைமை முகாமையாளர் எம்.ஐ.எம்.இஷாக் அவர்கள் இவர் கோரளைப்பற்று மத்தி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 2008 ஆம் ஆண்டு  கடமையாற்றும் போது பொதுமக்களுக்கு வளங்கியதாக கணக்குக்காட்டி 300000.00 இலட்சம் மோசடி செய்து கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தால் ஆய்வு செயியப்பட்டு நிதி மோசடியை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 விசாரணை மூலம் மோசடி செய்தது உறுதிப்படுத்தப்பட்டும் அவர் மீது  10 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இன்றுவரை அப்பாவி முஸ்லிம் மக்களின் வாழ்வாதார உதவியை உரியவரிடம் வழங்காமல் இருக்கும் எம்.ஐ.எம்.இஷாக் அவர்கள் நிதி மோசடி குற்றவாளி என நிருபிக்கப்பட்டவர்.
இவர் மீதான நிதிக் குற்றம் உறுதி செய்யபட்டுள்ளது ஏன் இவருக்கு எந்தவித நடவடிக்கையும் அரசாங்க அதிபர்  எடுக்காமல் உள்ளார்.
மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய தமிழன் திரு.எம்.எஸ்.மரியதாஸ் அவர்கள் முன்னறிவிப்பு இன்றி கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தால் அவரின் பதவி இழக்க செய்த அரசாங்க அதிபர்
ஏன்  இவ்வாறானவர்களை காப்பாற்றி வருகிறார்.
எம்.ஐ.எம்.இஷாக் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ ஹாபிஸ் நசீர் அஹ்மட் பொறியியலாளர் அவர்களின் மருமகன் என்பதால் மோசடியுடன் தொடர்புடைய குற்றங்கள் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தால் உறுதிப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள்  என்று கூறப்படுகிறது.
அடுத்து மட்டக்களப்பு  காணி ஆணைக்குழுவின்  பணிப்பாளர் விமல்!

முன்னர் கருணாவின் சகாவாக இருந்த இவர் மட்டக்களப்பில் அரசாங்க அதிபருடன் இணைந்து பல LRC காணிகளை விற்று பல கோடி சொத்துக்களை சேர்ந்தவர்.
கிரான் குளத்தில் இருந்த மக்களுக்கு 400 துண்டு LRC காணி வழங்குவதாக கூறி அதில் தங்களுக்கு சார்பான 150 குடும்பங்களை புதிதாக இணைத்து அவர்களிடம் 40,000 ரூபா வீதம் பணம் அறவிட்டதோடு அதற்கு எந்த பற்றுச்சீட்டும் வழங்கவில்லை குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
குறித்த வீட்டு திட்டத்தை அரசாங்க அதிபரே திறந்து வைத்திருந்தார்.
 
இதேபோன்று கிரானில் பல ஏக்கர் காணி மற்றும் வாகரையில் பல ஆயிரம் ஏக்கர் காணி என மட்டக்களப்பில் பல ஆயிரம் ஏக்கர் LRC  காணிகளை முஸ்லீம்களுக்கு  அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் கொடுத்து பணம் சம்பாதித்துள்ளனர்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  சவுக்கடி தளவாய் மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள 95 வீதமான  LRC  காணிகளை முஸ்லீம்களுக்கு விற்பனை செய்ததில் காணி ஆணையாளர் விமலுக்கு தொடர்வு உண்டு.
ஆட்சி மாற்றம் நடைபெற்ற இந்த இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளேயே குறித்த பிரதேசத்திலுள்ள  சுமார் நூற்றுக்கணக்கான LRC காணிகளை தனியார் காணியென உறுதி முடித்து விற்பனை செய்துள்ளனர் .
குறித்த காணிகள் ஹிஸ்புல்லா   கருணாவின் முன்னாள் சகா ரவி மற்றும் முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அவர்களின் சகாக்கள் ஆகியோருக்கு தனியார் காணியென விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஏற்கனவே இருந்த சிங்கள குடியேற்றத்தை நடைமுறை படுத்த முற்பட்ட போது அவர்களுடைய காணிகள் சில அபகரிப்பு செய்யப்பட்ட நிலையில்   குறித்த செய்தி சிங்கள ஊடகங்களுக்கும் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும் சென்று விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போதே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது போல் இறங்க காணி ஆணையாளர் விமல் வழக்கு தாக்கல் செய்ய தாங்கள் அதற்கு எதிரானவர்களாக காட்ட முற்பட்டதுடன் துப்பாக்கிய சூட்டுக்கும் இலக்காகியிருந்தார்.
ஏற்கனவே LRC காணி என அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணிகள் சம்பந்தமாக தரவுகள் கச்சேரியில் இருந்தும் அதனை மறைத்து தனியார் காணியென விற்பனை செய்யும் மட்டும் காணி ஆணையாளர் விமல் எங்கு இருந்தார். அவருக்கு அது தெரியாமல் போனது எவ்வாறு?
எல்லாமே அனைவருக்கும் தெரிந்தே நடந்துள்ளது.
LRC காணி விடயங்களில் பிரதேச செயலாளர்கள் தலையிடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டே அவை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் உயர் மட்ட தலையீடுகள் இருந்துள்ளது.
தங்களது LRC காணி மோசடிகள் வெளியானவுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை களத்தில் இறக்கி ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த இடத்திற்கு  காணி ஆணையாளர் விமல் வருவதுபோல் வந்து நடவடிக்கை எடுப்பது போல் எடுத்துள்ளார்.
குறித்த விடயத்தில் அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு
அனைத்தும் சோடிக்கப்பட்ட நாடகம் என புலனாய்வுதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது குறித்து யாரும் பேசுவதும் இல்லை.
அரசாங்க அதிபருடன் இணைந்து பல ஆயிரம் ஏக்கர் காணியை முஸ்லீம் நிறுவனங்கள் முஸ்லீம் அரசியல் தலைமைகள் சிங்கள அமைச்சர்கள் கருணா கருணாவின் சகா ரவி ஆகியோருக்கு கொடுத்து பல கோடி  பணம் சம்பாதித்த விமல் அரசாங்க அதிபர் ஊழல் செய்யவில்லை அரச அதிகாரிகள் ஊழல் செய்யவில்லை என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார் என்றால் ஊழல் வாதிகளின் பிடிக்குள் மட்டக்களப்பு மாவட்டம் சிக்கி தவிக்கின்றது என்பதையே காட்டுகிறது.
கிழக்கில் நல்லாட்சியிலேயே அதிக காணி அபகரிப்பு!
கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வருட கால நல்லாட்சி அரசாங்கத்திலேயே தமிழ் மக்களின் அதிகளவான காணிகளை சட்டவிரோதமாக அபகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் முஸ்லீம் எல்லைகளில் உள்ள தமிழ் மக்களது காணிகளை முஸ்லீம் அரசியல் தலைமைகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அபிவிருத்தி திட்டம் குடியேற்ற திட்டம் என்ற போர்வையில் அபகரித்து வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-