News Update :

Tuesday, July 4, 2017

TamilLetter

மஹிந்தவை கைது செய்யத் துடிக்கும் ஜனாதிபதி - நேற்றைய கூட்டத்தில் தெரிவிப்பு

மஹிந்தவை கைது செய்யத்  துடிக்கும் ஜனாதிபதி - நேற்றைய கூட்டத்தில் தெரிவிப்பு

ட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் மூன்று மாதத்­திற்கு என்­னிடம் தாருங்கள், தந்தால் மஹிந்த தரப்பு உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

மஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு செலுத்­து­வதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சி­யினை உரு­வாக்­கலாம் என கன­வு­ கா­ண­வேண்டாம். மஹிந்த தரப்­பி­னரை விட்­டு­விட்டு என்­னுடன் செயற்­ப­டு­ப­வர்கள் மீதே வழக்­குகள் தாக்­கல்­செய்­யப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் எமது கட்­சியை ஓரம்­கட்ட பார்க்­கின்­றீர்கள் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்ற ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட அமைச்­சர்கள் பங்­கேற்ற இந்தக் கூட்­டத்தில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு கூறி­யுள்ளார்.

வழக்­குகள் தாம­திக்­கப்­ப­டு­கின்­றமை கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் இது­வரை உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமை குறித்து அதி­ருப்தி தெரி­வித்த ஜனா­தி­பதி இவ்­வி­டயம் குறித்து கடும்­தொ­னியில் கருத்து தெரி­வித்­துள்ளார்.

இங்கு ஜனா­தி­பதி மேலும் தெரி­விக்­கையில் சட்­டமா அதிபர் திணைக்­களம், நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு ஆகி­ய­வற்றின் அதி­கா­ரி­களை அழைத்து நான் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குடும்ப வழக்­குகள் தாம­த­மா­வ­தற்கு என்ன காரணம் என்று நான் அவர்­க­ளிடம் கேட்­டி­ருந்தேன். இதற்குப் பதி­ல­ளித்த அவர்கள் மேலி­டத்­தி­லி­ருந்து அழுத்­தங்கள் வரு­கின்­றன என்று தெரி­வித்­தார்கள்.

இவ்­வாறு ஜனா­தி­பதி தெரி­வித்த போது யார் அந்த அழுத்­தத்தைக் கொடுப்­பது அவர்­க­ளது பெயர்­களைக் கூறுங்கள் என்று அமைச்­சர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். ஆனால் பெயர் எத­னையும் குறிப்­பி­டாத ஜனா­தி­பதி மேலும் கூறு­கையில்;

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தி­லுள்ள நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வையும் மூன்று மாத­கா­லத்­திற்கு என்­னிடம் ஒப்­ப­டை­யுங்கள். அவ்­வாறு ஒப்­ப­டைத்தால் அந்­தக்­கா­லப்­ப­கு­திக்குள் மஹிந்த தரப்­பினர் உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் நிறுத்­திக்­காட்­டுவேன். தற்­போது அவர்­களை கைது­செய்­வ­தற்­கான அதி­காரம் என்­னி­டத்தில் இல்லை. நீதி­ப­தி­களை நிய­மிக்கும் அதி­கா­ரமும் என்­னி­டத்தில் இல்லை. அர­சி­யல்­யாப்பு சபையே அதனைத் தீர்­மா­னிக்­கின்­றது.

ஊழல் விசா­ரணை செய­லகம் பிர­த­மரின் கீழேயே உள்­ளது. இந்த செய­ல­க­மா­னது வழக்­கு­களை அர­சுக்குப் பாத­க­மா­கவும், எதி­ர­ணிக்கு சாத­க­மா­கவும் தயா­ரித்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பு­கின்­றது.

இந்­த­தி­ணைக்­க­ளத்தில் நான்கு ஆலோ­ச­கர்கள், மற்றும் ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள் பலர் உள்­ளனர். இவர்­க­ளுக்கு பெரு­ம­ளவு சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன் வாகன வசதி உட்­பட சகல வச­தி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் எது­விதப் பிர­யோ­ச­னமும் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. முக்­கிய நபர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­களை தாக்கல் செய்­யாத இவர்கள் சிறு­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ரா­கவே வழக்குத் தாக்கல் செய்­கின்­றனர். எனது தரப்­பி­லுள்ள பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே 76 வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

மஹிந்த தரப்­பி­ன­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக இல்லை. மீளவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வந்தால் சரத் பொன்­சோ­கா­வுக்கு நடந்­த­தை­விட எனக்­குத்தான் அதிக தீங்கு இழைக்­கப்­படும். மஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு தெரி­விப்­பதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சியை கைப்­பற்­றலாம் என்று ஒரு­போதும் கன­வு­கா­ண­வேண்டாம்.

அவர் ஆட்­சிக்கு வந்தால் எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்­குமே ஆபத்­துள்­ளது. நான் பெரிய கட்­சி­யொன்­றி­லி­ருந்து துணிந்தே ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருந்தேன். அன்று நான் தோற்­றி­ருந்தால் எனது மக­ளையும் மரு­ம­க­னையும் கைது செய்து எனக்கும் ஆபத்தை உரு­வாக்­கி­யி­ருப்பர். உங்­க­ளி­டத்தில் அவ­ருக்கு கோப­மில்லை என்று எண்­ணி­வி­ட­வேண்டாம்.

மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் ஆயுள்­காலம் வரை நீங்கள் மீண்டும் ஆட்­சிக்கு வர முடி­யாது. இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையே அவர் அமைச்­சர்­க­ளாக நிய­மிப்பார். எனவே அவ­ருக்கு ஆத­ரவு அளிப்­பதன் மூலம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி ஆட்­சிக்கு வர­மு­டியும் என்று நீங்கள் எண்­ணக்­கூ­டாது.

எனவே சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும், பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் என்­னிடம் மூன்று மாதங்­க­ளுக்கு தாருங்கள் மஹிந்த தரப்­பையும் ஏனைய குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று ஜனா­தி­பதி கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்திருந்தார் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு கடும் அதிருப்தி தெரிவித்தமையானது அமைச்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அதிருப்தியின் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் மலிக் சமரவிக்கமவும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரியவருகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-