News Update :

Saturday, July 29, 2017

TamilLetter

தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜின் கேள்விக்கு பதில் சொல்லும் பாமரன்தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜின் கேள்விக்கு பதில் சொல்லும் பாமரன்


எஸ்.எல்.எம்.ஹறூன்

தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களுக்கு எதிராக தனது முகநூலில் ஒரு பதிவை போட்டிருந்தார்.

அந்த பதிவில் அதாஉல்லாவை காப்பாற்றப் போய் அதாஉல்லாவை குற்றவாளியாக காண்பித்துள்ளதை அவர் இன்னும் அறியவில்லை.

இதய சுத்தியுடன் அதாஉல்லா எதையுமே செய்கின்றவர் என்று கூறும் நண்பர் பஹீஜ் கடந்த மாநகர சபை தேர்தலின் போது நமது அக்கரைப்பற்று மண்ணில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசப்பட்டதை மறந்து விட்டார்.

பேசப்பட்டதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்

அதாஉல்லா தனது சொந்த நலனுக்காகவே எல்லாவற்றையும் செய்கின்றார்.ஒரு கட்டிடத்தை கட்டுவதென்றால் தனது பெயரை அல்லது தனது உரவினரின் பெயரில் அந்த கட்டிடம் அமைய வேண்டுமென எதிர்பார்ப்பார்.

இவ்வளவு பெரிய படித்த ஊரில் ஒன்றும் தெரியாத தனது மகனை மேயராக்கி அக்கரைப்பற்றை அவமானப்படுத்த போகின்றார்.

அக்கரைப்பற்றின் முதுகெழும்பான வர்த்தகத்துறையை அழிக்கும் நோக்கில் முட்டாள்தனமாக சந்தைக் கட்டிடத்தை கட்டி வைத்துள்ளார்.இதனால் வியாபாரத்தை இழந்த எத்தனை பேர் இன்று அழுது கொண்டு திரிகின்றனர்.

மீன் சந்தை கட்டிடம் என்ற போர்வையில் எதோ ஒன்றை கட்டிவிட்டு அம் மீன் வியாபாரிகளின் வாழ்க்கையை அழித்து விட்டார். அவ் வியாபாரிகள் உரிய இடத்தை விட்டு வேறு இடத்தில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.அத்தோடு அந்த கட்டிடம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது.

ஊருக்கே அழகு சேர்க்கும் பஸ் தரிப்பிட கட்டிடத்தை பேய்கள் உறங்கும் நிலையமாக மாற்றி சிறு வியாபாரிகளை ஒட ஒட விரட்டிய பெருமை அதாஉல்லாவையே சாரும்.

சேகு இஸ்ஸதீனின் மேல் கொண்ட கோபத்தால் புகழ் பெற்ற மைதானத்தை அழித்து அக்கரைப்பற்றின் விளையாட்டை இல்லாமல் செய்ததை இன்னும் அந்த சமூகம் மறக்கவில்லை; ஐயா

ஆதார வைத்தியசாலையை விருத்தி செய்வதற்கு நிலப்பற்றாக்குறை காரணமாக ஒதுக்கப்படும் பணங்கள் மீள திரும்புகின்றதை அந்த வைத்தியசாலை நிருவாகிகள் ஒவ்வொறு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஒப்பாரி வைப்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? இதுதான் உங்களது தூர சிந்தனையா?

பொதுத் தேவைகளுக்கு பயன்படக் கூடிய அரச நிலங்களை அதாஉல்லாவின் ஆட்கள் கள்ளத்தனமாக வைத்திருப்பதை அரச உயர் கூட்டங்களில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் முறையிடுவதை நீங்கள் அறியவில்லையா?

அக்கரைப்பற்றுக்கு உரித்தான மாகாண சபை உறுப்பினர் பதவியை இல்லாமல் செய்வதற்கு சூழ்ச்சிகள் செய்து மேடை போட்டு கத்தியதை இந்த ஊரின் காதில் விழவில்லையா?

சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட 500 வீடுகளையும் வழங்க விடாமல் தடுத்து தமது விதவைத் தாய்மார்களையும்,ஏழைகளையும் வயதுக்கு வந்த சகோதரிகளையும் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்ய வைத்ததை ஒவ்வொறு இரவுகளிலும் பாதிக்ப்பட்டவர்கள் நினைத்துக் கொண்டே தூங்குகின்றனர். அம் மக்களின் வேதனை புரியுமா? உங்களுக்கு

பாடசாலைகளில் தனது அரசியலை செய்வதற்கு தனது முகவர்களை அதிபர்களாக நியமித்து கல்வியை சீர்குலைத்ததை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டவில்லையா?

சாதாரண ஆசிரயராக இருந்த அதாஉல்லா பல கட்டிடங்களுக்கும்,வீடுகளுக்கும் இன்னும் பலவற்றுக்கும் சொந்தக் காரராக மாறியது எப்படி என்று உங்களால் கூறமுடியுமா?

பதூர் விளையாட்டு மைதானத்தை அதாஉல்லா போய் திறந்து வைத்து விட்டு இன்று அது மைதானம் இல்லை என்று சொல்லி அங்கு நடக்கும் அபிவிருத்தியை தடுத்து அப் பிரதேச விளையாட்டு வீரர்களை உச்சி வெயிலில் காய வைத்ததை அந்த வீரர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

அதே போல் அக்கரைப்பற்று பொது மைதானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க வேண்டுமென்று பகிரங்கமாக கூறி அந்த மைதனத்தை பாலைவனமாக மாற்றி எந்தவிதமான மாவட்ட,மாகாண,தேசிய போட்டிகளோ நடைபெற முடியாதவாறு தடுத்து உங்கள் அதிகார வெறியை தீர்த்துக் கொண்டதன் மூலம் அந்த இளைஞர்களின் கனவு ஆசை மற்றும் இலக்கை இல்லாமல் செய்துள்ளீர்களே இது நியாயமா?

வாடகையில் இருக்கும் மாவட்ட சமூக சேவை திணைக்களத்திற்கு சொந்தமாக ஒரு கட்டிடத்தை அமைக்க முற்பட்டதை தடுத்து நிறுத்தி அந்த ஊழியர்களை கையேந்த வைத்துள்ளதை அந்த ஊழியர்கள் மன்னிப்பார்களா?

எனவே இன்னும் எவ்வளவோ இருக்கின்றது ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு கூற முடியும் தேவைபப்படும் போது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக பேசுவார்கள்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-