News Update :

Friday, March 10, 2017

TamilLetter

ஹஸனலி செய்தது என்ன மாகாண சபை உறுப்பினர் தவம்



முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்திற்கு   மூன்று முறை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்  பதவி வழங்கப்பட்டு அத்தோடு சகல அதிகாரங்களும் கொண்ட செயலாளர் நாயகமாகவும் பல வருடங்கள் இருந்து வந்துள்ளார்.அவர் பதவி வகித்த காலத்தினுள் எமது சமூகத்திற்கு எதைப் பெற்றுத் தந்துள்ளார் என கேள்வி யெழுப்பினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

அக்கரைப்பற்று காதிரியா பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு மற்றும் அடுப்புகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் முன்னாள் செயலாளர் பத்திரிகைகளுக்கு அறிக்கை எழுதுவதிலே தனது காலத்தை கடத்தினார்.சாத்தியமான எந்த திட்டத்தையும் அவர் முன் வைக்கவில்லை கரையோர மாவட்டம் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார்.  கரையோர மாவட்டத்தின் எல்லைகள் மற்றும் அதனைச் சார்ந்த ஆவணங்கள தொடர்பாக ஒரு பக்க தாள் துண்டு கூட அவர் வைத்திருக்கவில்லை

காணிப் பிரச்சினை தொடர்பாக அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை பல வருட காலமாக செய்து வருகின்றனர்.அந்த போராட்ட மக்களை எப்போதாவது சந்தித்து கலந்துரையாடியுள்ளாரா?

பொத்துவில் காணிகள், வட்டமடு ஏன் அவரின் சொந்த ஊரிலுள்ள சா்ச்சைக்குறிய காணிகளையாவது களத்துக்கு சென்று பார்வையிட்டார?

இங்கே அறிக்கையால் எல்லாவற்றையும் சாதித்து விட்டதாக அவர் கூறுகின்றார்.எதுவுமே நடக்கவில்லை அவரிடம் அதிகாரம் இருந்த போது பெற்றுத்தராத விடயங்களை இப்போது பெற்றுத் தருவதாக கூறுகிறார்.

தேசியப்பட்டியல்  தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக கட்சியை புனிதப்படுத்த புறப்பட்டுள்ளேன் என்று கூறுகிறார்.

ஹஸனலிக்கும் பஷிருக்கும்.  பிடித்துள்ள  தேசியப்பட்டியல்    காய்ச்சல்  இன்று  முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கும் தொற்றியுள்ளதால்  .ஜனாதிபதியின் வீட்டுக் கதவை தினமும் தட்ட ஆரம்பித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-