News Update :

Wednesday, March 1, 2017

TamilLetter

கண்டியில் ஐயாயிரம் வாக்குகளை வைத்திருக்கும் ஹக்கீமுக்கு முழு அமைச்சுப் பதவி நியாயமா? இன்று நிந்தவூரில் ஹஸனலி கேள்வி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரீ.ஹஸனலியின் தலைமையில் நிந்தவூர் பெரிய பள்ளி வாசலில் கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து    அவரின் இல்லத்திலும் கட்சி ஆதரவாளர்களை அவர் சந்தித்து கருத்துக்களை தெரிவித்தார்.

கட்சியின் செயலாளராக இம் முறை ஹஸனலி தெரிவு செய்யப்படாத சூழ்நிலையில் மக்களை அழைத்து கட்சியின் தலைமையினால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக முறையிட்டார்.

இதே வேளை சில கட்சி ஆதரவாளர்களின் கேள்விகளுக்கும் ஹஸனலி பதிலளித்தார்.

ரவூப் ஹக்கீம் 17 வருட காலமாக  கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்து வருகின்றார் அம்பாரை மாவட்டத்திற்கு சொந்தமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற காலம் தொட்டு இன்று வரை அப் பதவியிலே சுகம் கானுகிறார்.

அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்தி குழுத் தலைவராக நமது கட்சியைச் சேர்ந்த யாருமே இல்லாத காரணத்தினால்தான் எமது காணிகள் பெரும்பான்மை சமூகத்தினரால் கபளிகரம் செய்யப்பட்டு வருகின்றது. நீண்டகால இப் பிரச்சினைக்கு  தீர்வை நாம் பெற முடியாமல் உள்ளது. இச் சந்தர்ப்பத்தில் தம்மிடம் அதிகாரம் பொறுந்திய முழு அமைச்சு அம்பாரை மாவட்டத்திலுள்ள ஒருவருக்கு கிடைத்திருந்தால் நாம் எல்லாவற்றையும் சாதித்திருப்போம்.

ரவூப் ஹக்கீம் 17 வருடகாலமாக முழு அமைச்சை வைத்திருப்பதன் மூலம் நமது மாவட்டத்திற்கு என்ன நன்மை ஏற்பட்டுள்ளது.தனிநபரின் பிழையான அனுகுமுறையிலும் தனது சுய தேவையினாலும் கட்சி இன்று சிதைந்து போய்யுள்ளது.

மாகாண சபைத் தேர்தலின் போது நான் ஒழிந்து கொண்டதாக ஹக்கீம் என்மீது குற்றம் சுமத்துகிறார்.நான் ஏன் மறைந்து கொண்டேன் கட்சியை மஹிந்தவிடம் அடகு வைக்க முற்பட்டார்.நான் தடுத்தேன் அவர் கேட்கவில்லை அதனால் எனது தொலைபேசியை நிறுத்தி விட்டு மூன்று நாட்கள் மறைந்திருந்தேன். அன்று நான் எடுத்த  முயற்சியினால்தான் இன்று நமது கட்சி சார்பாக ஒரு முதலமைச்சர் கிடைத்திருக்கார்.அன்று ஹக்கீம் சொல்வதை கேட்டு வெற்றிலைச்; சின்னத்தில் தேர்தல் கேட்டிருந்தால் நாம் இன்று கிழக்கில் ஆட்சியமைக்க முடிந்திருக்குமா?

அமைச்சர்; ஹக்கீம் முஸ்லிம்களுக்கு சார்பான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க மாட்டார்.அவர் போட்டியிடும் கண்டியில் 70 வீதமான சிங்கள மக்கள் இவருக்காக வாக்களிக்கின்றனர.; மீதியாகவுள்ள வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குறிய முஸ்லிம் வாக்குகள் போக   சுமார் ஐயாயிரம் வாக்குகள் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான வாக்குகள் அதன் காரணமாகவே நமது சமூகத்திற்கு எதிராக இளைக்கப்படும் அணைத்து விடயங்களிலும் அவர் மௌனம் காத்து வருகின்றார். கண்டியில் ஐயாயிரம் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் எப்படி 17 வருடங்களாக தொடர்ச்சியாக முழு அமைச்சை வைத்துக் கொண்டிருப்பது.என்றார்.

இன்று எனக்கு 72 வயதாகின்றது இதற்குப் பிறகு எந்தப் பதவியும் தேவையில்லை செயலாளரும் தேவையில்லை,அமைச்சும் தேவையில்லை,மந்திரியும் தேவையில்லை அனால் வழி தவறிப் பயணிக்கும் ரவூப் ஹக்கீமை திருத்த வேண்டும்.அவரிடமிருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். என்னை யாரும் கட்சியில் இருந்து விலக்க முடியாது நான் கட்சியை துாய்மைப்படுத்த தயாரிகிவிட்டேன்.

அடுத்த பொதுத் தேர்தலில் ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட தயாராகி வருவதாக நம்பப்படுகின்றது.அப்படி அவர் இங்கு வந்து    போட்டியிடுவாராயின் அவரை எதிர்த்து நான் சுயட்சையில் போட்டியிட்டு தோற்கடிப்பேன் என்று தனது ஆதரவாளர்களைப் பார்த்து கூறினார்.

மேலும் ஹக்கீமின் பித்தலாட்டத்திற்கு எதிராக வருகின்ற வெள்ளிக்கிழமை நிந்தவூரில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் சகல விடயங்களையும் கூறுவதாகவும் அதில் சகலரும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பும்   விடுத்தார்.

அத்தோடு ரவுப் ஹக்கிம் மற்றும் தவத்தின் பிரதிநிதிகள் தமது கூட்டத்தில் கலந்து கொண்டு   படம் பிடிப்பதாக அமைச்சர் ரிஷாட்டிற்கு ஆதரவான ஒரு ஊடகவியலாளர் ஹஸனலியிடம் முறையிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-