News Update :

Monday, March 13, 2017

TamilLetter

இசை விழாவுக்குள் புகுந்தது பஸ்! 38பேர் பலி!



 இசை விழாவில் கலந்து கொண்டு இசையை ரசித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் ஒன்றினால் 38 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தக் கோரச் சம்பவம் ஹைத்தி நாட்டில் நடந்தது. கேப் ஹைத்தியன் என்ற ஊரிலிருந்து தலைநகரான போர்ட் பிரின்ஸிற்கு வந்து கொண்டிருந்த அந்த பஸ், கொனைவெஸ் என்ற இடத்தில் மக்களின் இசைவிழா கூட்டத்திற்குள் புகுந்தது.
சாரிசாரியாக மக்களை அந்தப் பஸ் மோதிக்கொண்டே சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். பஸ் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் ஆத்திரம் கொண்ட மக்களால் தாக்கப்பட்டனர்.
துயரச் சம்பவத்தை அறிந்து அதிபர் ஜோவெனல் மோய்ஸ், விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார். 
மிக மோசமான சாலை வசதிகளைக் கொண்ட ஹைத்தியில் வாகனமோட்டிகளோ அல்லது பொதுமக்களோ சாலை விதிமுறைகளை ஒருபோதும் மதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், இதுபோன்ற விபத்துகள்ள நடக்கும் போது சமபந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுனர்கள் உயிருக்கு அஞ்சி ஓட்டம் பிடித்து விடுவர். இல்லையேல், ஆத்திரம் கொண்ட மக்களால் தர்ம அடிக்குள்ளாகி உயிர்விட நேரும். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-