News Update :

Wednesday, February 8, 2017

TamilLetter

பசீர் சேகுதாவூத்தின் யாரும் அறியாத அந்தரங்கம்


ஏறாவுர் எஸ்.தாஸீம்

 ஒரு படத்தில் மோட்டார் பொலிஸ் இலஞ்சம் வாங்கிக் கொண்டு இருந்தனர்.அதை தூரத்திலிருந்து வீடியோவில் படம் பிடித்துக் கொண்டு இருந்தார் வடிவேல். படம் பிடித்து முடித்தவுடன் கெமராவுடன் பொலிஸின் அருகில்; சென்ற வடிவேலு பொலிசைப் பார்த்து நீங்கள் இலஞ்சம் வாங்கியதை நான் படம் பிடித்துள்ளேன் என்று மிரட்டுகிறார்.

பயந்து போன பொலிஸ் வடிவேலுவிடம் கொஞ்சிக் கூத்தாடியும் சற்றும் அசராத  வடிவேல் நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறேன் என்று மீண்டும் சொல்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் வீடியோவை வாடகைக்கு கொடுத்த கடைக்காரர்; ஓடோடி வந்து சொல்கிறார் கமெராவுக்குள் கெஸட் போடவில்லை என்று சொல்லி தாண் எடுத்து வந்த  ஒரு கெஸட்டை போடச் சொல்லி வடிNலுவிடம் கொடுக்கிறார்.

கெஸட் இல்iயா என வடிவேலு கண் பிதுங்க அதுக்கப்புறம் பொலிஸ் வடிவேலுவை பிச்சி எடுத்தானுகள்.
அதே போன்ற  நிலவரம் ஒன்றுக்குள் மாட்டி விட்டார் பஸீர்
இந்த பஸீர் யார்? அவர்தான் ஜிப்ரி மாஸ்டர்
வெண்டாலும் தோத்தாலும் நான் எம்பிதான். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அமைச்சர்தான்' என்று ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு நெஞ்சுயர்த்திப் பிரகடனம் செய்தவர்  இந்த  ஜிப்ரி மாஸ்டர்

அன்று தமிழ் ஆயுதக் குழுவில் இணைந்து கொண்ட இவர் முஸ்லிம் பிரதேசத்தின் வேவு பொறுப்பாளராக பாலகுமாரனால் நியமிக்கப்பட்டார்.

முஸ்லிம் தனவந்தவர்கள்,வர்த்தகர்கள்,செல்வாக்குள்ளவர்கள் அணைவரினதும் பெயர்ப் பட்டியல் இவரின் வசம் இருந்தது.
குறிப்பாக தனது சொந்த ஊரான ஏறாவுரில்  மக்களை ஆயூதத்தைக் காட்டி அச்சுறுத்தி தனது தேவைகளை நிறைவேற்றிய ஒருவரிடம்  முஸ்லிம் சமூகத்தின் நாகரிகமான நடத்தைகளை கேட்டு நிற்பது எவ்வளவு முட்டாள்தனமானது.

உலக வரலாறுகளில் தவறு செய்யாத தலைவர்கள் ஒருவர் கூட இருந்ததில்லை தவறு காலத்தின் கட்டளையினால் இடம்பெறுவதை தவிர்க்க முடியாதது.ஆனால் அதிலிருந்து மீண்டு வருவது மனிதத்துவத்தின் பன்புகளில் உயர்வானது.

அந்த வகையில்  முஸ்லிம் காங்கிரஸின்  ஆரம்ப காலம் தொட்டே
போட்டிகளும்இகுழிபறிப்புக்களும்இ காட்டிக்கொடுப்புகளும்இ கழுத்தறுப்புக்களும் இருந்து கொண்டே வந்துள்ளது. அது இன்றுவரை தொடர் கதையாகவே  மாறி இருக்கின்றது

வார்த்தை ஜாலங்களில் வாக்காளர்களைக் கட்டிப்போடும் வாய்ச்சொல் வீரன் இலக்கியச் செம்மல்களின் இறுமாப்பைத் துடைத்தெறியும் சொற்போர் மன்னன் என்றெல்லாம் புகழப்படும் ஜிப்ரி மாஸ்டருக்கு சிறப்புப் பெயர்களோ ஏராளம்.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களும் அவற்றுக்கான காரணங்களும் பின்வருமாறு:

 சோற்று மாடு
நாளின் அதிக நேரத்தை வயிறு புடைக்கச் சாப்பிட்டுப் பெருத்த ஏப்பத்துடன் தூங்குவதிலேயே கழிப்பதனால். வள்ளல் பரம்பரை:

நூல் வெளியீட்டு விழாக்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஐநூறு ரூபா மட்டுமே அன்பளிப்புச் செய்வதனால். அடிக்கல் அமைச்சர் எல்லா அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளையும் அடிக்கல் நட்டு முடித்து வைப்பதனால். வெற்றி அறியா வீரன்

எல்லாத் தேர்தலிலும் தோற்பதே வழக்கமென்றாலும் எந்தத் தேர்தலுக்குப் பின்னும் எம்பியாகாது விட்டதில்லை

அத்தோடு  வடிவேலுவின் கதை போல் இவரின் சீடிகள்    நகைச்சுவையாக  மாறிப் போய்விட்டது.

பாவம் தவிசாளர் பதவியாவது காப்பாற்றியிருக்கலாம்.
 
TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-