News Update :

Sunday, February 5, 2017

TamilLetter

கிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்

ஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத்தில் இஸ்லாமிய இயக்கங்களோடும்இ சமூக சேவையோடும் தன்னை பிணைத்துக்கொண்ட அவர் தனது உயர் கல்வியை பொறியியல் துறையில் முடித்துக்கொண்டார்.இ பின் நாளில் முஸ்லீம் நாடுகளில் தொடர்புமிக்கவராகவும்இ உயர்வியாபார நுணுக்கங்களைக் கொண்ட ஒருவராகவும் தன்னை பெரிதும் வளர்த்துக் கொண்டதுடன் பழமொழித் தேர்ச்சியும் அவரது பலமாகும்.

இந்நிலையில் பெரும் தலைவர் ஆர்ஆ. அஷ்ரப் அவர்கள் தனது முஸ்லீம் இயக்கமான முஸ்லீம் காங்கிரசுக்கு வலுச்சேர்க்கும் ஒரு தலையாக இவரை இணைத்துக் கொண்டதுடன்இ கட்சியின் உயர் பதவிகளையும் வழங்கினார்.

கட்சியின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வெளிவிவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு மிக்க துறை இவரிடம் பெருந்தலைவர் மூலமாக ஒப்படைக்கப்பட்டது.
பெரும் தலைவரின் மரணத்தின் பின் ஏற்பட்ட இடைவெளி பல முரண்பாடுகளுடன் இவரை கட்சியை விட்டு வெளியேற வைத்தது. இருப்பினும் தனது மீள் வருகை மூலம் கட்சியில் தனது இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார்.

இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க காரணகர்த்தாவாக இருந்த நஷீர் அஹமத் அவர்கள்இ ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக முதலாவது முதலமைச்சராக கிழக்கின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கட்சியின் மீது கூறப்பட்டு வந்த அபிவிருத்திப் பாதையின் சறுக்கல்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இ தேசிய காங்கிரஸ் என்ற முஸ்லீம் கட்சிகள் மூலமாக காட்டப்பட்டு வந்த அபிவிருத்தி இலக்குகள் என்பன ஒரே நேரத்தில் தகர்க்கப்பட்டு முஸ்லீம் காங்கிரசின் அபிவிருத்திப் பாதையின் பாரிய முன்னேற்றத்தை தோற்றுவித்தது. அத்துடன் ஆளுமையுடனான நடவடிக்கைகள் மூலமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சியும் வடிவமைக்கப்பட்டமையினால் மத்தியில் ஆட்சிப் பங்களாயிருக்கும் பா.உ க்கள் பிரதி அமைச்சர்கள்இ ராஜாங்க அமைச்சர்கள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என்று பலருக்கும் ஒருவித போட்டியும் பொறாமையும் கலந்த மனோ நிலை உருவாகியது.

இந்நிலையில் கிழக்கின் முதலமைச்சர் பதவி அம்பாறைக்கு எதுவும் செய்யவில்லை என சில பினாமிகளும் திருமலைக்குஇ மட்டக்களப்பின் சில பகுதிகளுக்குஇ பின்னர் எராவூருக்கே ஒன்றும் செய்யவில்லை என முளுப் பூசணியை சோற்றில் மறைக்க எத்தனித்து தோல்வியுற்றன. அத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்வை கொண்டாடும் ஊடகங்களும் இவற்றுக்கு ஒத்து ஊத சற்றேனும் பின்னிற்கவில்லை.

மறைந்த பெரும் தலைவருக்கு பிற்பாடு வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை ஒருங்கே முன்னெடுக்கும் வாய்ப்பு முதலமைச்சு மூலமாக கிடைக்கபெற்றுள்ள போது அதனை மிக பொருத்தமாக பயன்படுத்தியுள்ள போதுஇ அவர்மீதான வசைபாடல்களும் கட்சிக்குள்ளான விமர்சனங்களும் மீண்டும்இ மீண்டும்இ சிற்றுனர்வுகளின் மூலமாக தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. உள்ளூர் பொறாமையும் இதில் பிரதான பங்கு வகிக்கின்றது.

எது எப்படியாயினும் இ இன்றைய நிலையில் கிழக்கு முதலமைச்சரும் முதலைச்சும் முஸ்லீம் சமூகத்திக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்இ மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பல தந்துள்ளனஇ நிச்சயமாக ஏழைகளின் பிரார்த்தனைகள் காக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-