News Update :

Thursday, February 23, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸோடு இணையும் உதுமாலெப்பை ?


குல்ஸான்

அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருவதால் மாகண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறு அவரின் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை மக்கள் நிரகரித்ததை தொடர்ந்து அவரின் கட்சி ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.இதன் அடிப்படையிலே இக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

அம்பாரை மாவட்டத்தில் ரிஷாட்டின் வருகையையினால் அதாஉல்லாவின் வாக்கு வங்கியிலே அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.; 

அதாஉல்லாவுக்கு எதிர்க்கட்சி அரசியல் புதிது என்பதால் சவால்களை சந்திக்க முடியாமல் மௌனம் காத்து வருகின்றார்.இதனால் அக்கட்சி ஆதரவாளர்கள் சோர்வடைந்து வருகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.தேசிய காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னம் அல்லது சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிடலாம்.அக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அம்பாரை தொகுதியில்; உள்ள சுமார் 60ஆயிரம் பெரும்பான்மை வாக்குகளோடு; பலப் பரிட்சை செய்ய வேண்டும்.

தேசிய காங்கிரஸின் தலைவர் கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற 16600 வாக்குகளோடு இன்னும் சில ஆயிரம் வாக்குகள் அதிகரித்தாலும் பெரும்பான்மை சமூக வேட்பாளர்களால் பெறப்படும் ;விருப்பு  வாக்குகளை இவர்களால்; தொடவே முடியாமல் போய்விடும்.

ஐக்கிய தேசியக் கட்சி,; முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு அம்பாரை மாவட்டத்தை இலகுவாக கைப்பற்றுவதற்கு வழிசமைக்கும் இதனால்; கூடுதலான ஆசனங்களை இக் கூட்டமைப்பு பெரும்.
கடந்த முறை 26 ஆயிரம் வாக்குகளை உதுமாலெப்பையும்,அமீர் 19 ஆயிரம்,ஆரீப் சம்சுதீன் 18ஆயிரம் வாக்குகளையும் பெற்றதனால் மூன்று  உறுப்பினர்களை தேசிய காங்கிரஸால் பெற முடிந்தது.இதற்கு பல சாதகமான களநிலவரங்கள் அன்றைய காலகட்டத்தில் தோன்றியிருந்தது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்து கொண்டு தேர்தலை நடாத்தியதால் ஜனநாகத்தை குழிதோண்டி புதைக்கும் தேர்தலாக அது அமைந்தது, இதனால் தமிழ் வாக்குகள் ஆயத முனையில் கொள்ளையிடப்பட்டது,அரசாங்க அதிகாரிகள் ஏஜென்டாக செயற்பட்டமை,பொலிஸ் பக்க சார்பாக செயற்பட்டமை என இன்னும் பல்வேறு காரணங்களால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அம்பாரை மாவட்டத்தை கைப்பற்றுவதற்கு உறுதுணையாக அமைந்தது.இதனால் அதிக ஆசனங்கள் இக் கட்சியின் வசமானது.

எதிர் வருகின்ற தேர்தல் தேசிய காங்கிரசுக்கு வித்தியாசமான களநிலவரத்தை தோற்றுவிக்கும் குறிப்பாக எதிர்க்கட்சி அரசியல் அமைச்சர் ரிஷாட்டின் வருகை,ஆரீப் சம்சுதீனின் விலகல், தமிழ் வாக்குகளின்; மாற்றம், ஆளும் கட்சியின் அதிகாரம் மற்றும் பணங்களின் ஆதிக்கம் என பல காரணிகளால் அம்பாரை மாவட்டத்தில் தாக்கம் செலுத்தும்.

அம்பாரை மாவட்டத்தில் அதாஉல்லாவின் கூட்டு இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுமாயின் இதன் மூலம் சிங்கள உறுப்பினர்களே அதிகமாக  தெரிவு செய்யப்படுவர்.இதற்கு கடந்த பொதுத் தேர்தல் சிறந்த உதாரணம்.

இப்படியான இக்கட்டான பொறிக்குள் தேசிய காங்கிரஸ் மாட்டிக் கொண்டு விட்டதால் அதிலிருந்து உதுமாலெப்பையை விடுவிப்பதற்கே அவரின் ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையும் தமது ஆதரவாளர்களின் கருத்துக்கள் நியாயபூர்வமானது என்பதை பல முறை ஏற்றுக் கொண்டுள்ளார்.

கட்சியின் ஏதிர்கால அரசியல் தொடர்பாக சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென தலைமைக்கு அழுத்தம் கொடுத்தும் வருகின்றார்.ஆனால் தலைமை உதுமாலெப்பையின் கூற்றை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

எனவே உதுமாலெப்பையின் அரசியல் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலோடு அஸ்தமனமாகி விடுமா?TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-