News Update :

Monday, December 19, 2016

TamilLetter

பிரதியமைச்சு கொடுத்தும் ஹரீஸ் இயங்கவில்லை- தலைவர் ஹக்கீம்-இதற்கான உண்மைக் காரணம்


எஸ்.எல்.பாரீஸ் - கல்முனை

மீனைக் கொடுக்காதே மீன் பிடிக்க கற்றுக் கொடு  எனும் மேற்கத்திய வாசகம் ஒன்று உள்ளது.அதற்கமைவாக தலைவன் என்பவன் தனது சமூகத்திலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீhத்து வைக்கும் அதே சமயம்; அந்த பிரதேசத்திற்கு தலைமை தாங்கக் கூடிய இளைஞர்கள் மற்றும் திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தலைமைத்துவ பன்புகளை வளர்த்தெடுப்பதில் அதிக அக்கறை; செலுத்துவான்

அந்த வகையில் பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஏதாவது நிகழ்வுகளுக்கு செல்லும் போது அந்த பிரதேசத்தில் உள்ள திறமையான ஆளுமையுள்ள நபர்களை இனம் கானுவதிலும் அவர்களை வளர்த்தெடுப்பதிலும்; அதிக திவீரம்காட்டினார்.;.
ஆனால் தலைவரின் மறைவுக்கு பின்பு பதவியேற்ற ரவூப் ஹக்கீம் இதற்கு எதிர்மாறாக தனது தலைமைத்துவ பன்புகளை வெளிக்காட்டுகின்றார்.;

திறமையானவர்களும் ஆளுமையானவர்களும் கட்சியில் இருந்தும் கூட அவர்களுக்கு சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் வழங்காமல் அவர்களை தட்டிக் கழிப்பதிலே கூடிய கவனம் செலுத்தி வருகின்றார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்று வந்த வேளை பொதுபல சேன மற்றும் பெரும்பான்மை சமூகத்தினால் முஸ்லிம்கள் நசுக்கப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வந்தார் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள:
;
இப் பேச்சின் மூலம் ஹரீஸின் ஆளுமையையும் துணிச்சலையும் பார்த்த மக்கள் பாராட்டினர்.மக்கள் மத்தியில் ஹரீஸ் எம்.பியின் வளர்ச்சி தனக்கு ஆபத்தாகி விடுமோ என கருதிய தலைவர் ஹக்கீம் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கு முன்பு அது தொடர்பான விளக்கத்தை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டுமென கட்டளையிட்டார்.

தலைவர் ஹக்கிமை எதிர்த்தால் தனது அரசியல் அதிகாரம் பறிபோய்விடும் என்பதோடு மக்களும் இன்னும் தலைமைத்துவ மயக்கத்திலேயே இருந்து வருவதால் தனது குரலை மங்கச் செய்தார் பிரதியமைச்சர் ஹரீஸ்.

அத்தோடு கல்முனை சந்தாங்கேனி மைதானத்தின் அபிவிருத்திக்கான ஆரம்ப நிகழ்வை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களை கொண்டு ஆரம்பிப்பதற்கு திட்டம் போட்டு ஜனாதிபதியின் விருப்பத்தையும் பெற்றிருந்தார்.

புிரதியமைச்சரின் அழைப்பை ஏற்று; கல்முனைக்கு ஜனாதிபதி சென்றால் தலைவர் ரவூப் ஹக்கிமின் மவுசு குறைந்து விடும். அத்தோடு யார் வேண்டுமென்றாலும் ஜனாதிபதியை தனது பிரதேசத்திற்கு அழைத்து செல்வதுடன் ஜனாதிபதியோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் மேலோங்கியது.
தலைவரின் இப்படியான கீழ்த்தரமான செயற்பாட்டை அறிந்த பிரதியமைச்சர் ஜனாதிபதியை அழைப்பதை கைவிட்டு விட்டு விளையாட்டுத்துறை அமைச்சரைக் கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்தார்.

இப்படியான மக்களுக்கு தெரியாத பல ரகசியங்கள் அம்பாரை மாவட்டத்தில் நிறைந்து கிடக்கின்றன.ரவூப் ஹக்கிமுக்கு போட்டியாக அம்பாரை மாவட்டத்திலிருந்தான் ஒருத்தர் வர முடியும் என்பதை தெட்டத் தெளிவாக அறிந்த ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களையும் தலைவர்களையும் பணயக் கைதிபோல் நடாத்த முற்படுகின்றார்.

இதற்கான உதாரணமே கல்முனை வேலை வாய்ப்பு பணியகம் அம்பாரைக்கு சென்றதும் இதன் மூலம் ஹரீஸ் எம்.பியின் செல்வாக்கை சிதைப்பது என்ற குறிக்கோள் தவைரிடம் இருந்தது.அந்த குறிக்கோளின்; வெளிப்பாடே அதிர்வு நிகழ்ச்சியில் பிரதியமைச்சர் ஹரீஸ் மீது ஹக்கிமால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

அம்பாரை மாவட்ட மக்களே சிந்தியுங்கள் நமது விரல்களைக் கொண்டே நமது கண்ணை குத்த முனைகின்றார் தலைவர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-