News Update :

Sunday, November 27, 2016

TamilLetter

நேபாளில் நிலநடுக்கம்; இமயமலை அருகே மையம்



நேபாள நாட்டின் கிழக்கு பகுதியான பனோட்டி பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இமயமலைக்கு அருகில் இருக்கும் சொலுகும்பு மாவட்டம் அருகே மையமிட்டிருந்தது.
அதிகாலை 5.05 மணிக்கு நடந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏறக்குறைய 10 கிலோ மீட்டருக்கு ஏற்பட்டதாகவும் காத்மாண்டுவிலிருந்து 131 கிமீ தொலைவில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தை இந்தியாவின் பீகார் மாநிலம் வரை உணர முடிந்ததாக கூறபடுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-