News Update :

Monday, July 6, 2020

TamilLetter

தவத்திற்கு வாக்களித்து விட்டு மற்றைய இரண்டு வாக்குகளையும் அளிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை


தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து விட்டு முன்னாள் மகாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் ஐந்தாம் இலக்கத்திற்கு வாக்களித்து விட்டு ஏனைய இரண்டு வாக்குகளையும் ஏனைய இரண்டு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அண்மையில்  அக்கரைப்பற்றில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல செயற்திட்டங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.கொரனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த ஜனாஸாக்களை ஏரித்து முஸ்லிம்களுடைய மனங்களை புன்னாக்கி விட்டார்கள்.இந்த அரசுக்கு முஸ்லிம்கள் மீது அக்கறையிருந்தால் உடனடியாக சுற்று நிரூபத்தை நீக்க வேண்டும்.
ஆத்தோடு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குங்கள் என்று கூறுகின்றவர்கள் முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுத்தந்துவிட்டு எங்களது ஆதரவை கேளுங்கள்.இங்கே யாரும் எம்.பியாகி அமைச்சராவது பிரச்சினையில்லை ஆனால் முஸ்லிம்களின் பாதுகாப்பும் சுய கௌரவமே முக்கியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-