News Update :

Friday, June 5, 2020

TamilLetter

ஏற்கனவே அமைச்சராக இருந்து காட்டி கொடுத்தது போதும் - நயீம் இஸ்மாயில்



அம்பாரை மாவட்டம் முஸ்லிம்களின் இதயம் அதை வெற்றி கொள்வதே மக்களின் இலக்காக இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களின் பதவி வெறிக்காக அந்த இலக்கிலிருந்து நாம் மாறக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களின் பொது மக்கள் தொடர்பதிகாரி நயீம் இஸ்மாயில் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பாக அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இன்று முஸ்லிம் சமூகம் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு நமது பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலமே தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வை பெற முடியும்.

அம்பாரை மாவட்டத்தில் எத்தனையோ வருடங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தவர்கள் எமது சமூகத்தின் உரிமைகளை தாரி வார்த்து கொடுத்ததுதான் அதிகம். ஆதற்கான சிறந்த உதாரணங்கள் அதிகமாகவே உள்ளது. பொத்துவிலில் இடம் பெற்ற 14 முஸ்லிம்களின் படுகொலை,நுரைச்சோலை வீட்டுத்திட்டம்,வட்டமடு காணிகள் மற்றும் பொத்துவில் 500 ஏக்கர் காணிகள் என இன்னும் ஏராளமானவற்றை நாம் இழந்து தவித்துள்ளோம்.

தற்போது அதே நபர் வந்து கொண்டு எனக்கு வாக்களிங்கள் நான் முழு மந்திரியாகி காட்டுகிறேன் என்கிறார்.இது எவ்வளவு கேவலம் கெட்ட விடயமாகும். அதே போல் இன்னுமொறு கட்சியைச் சேர்ந்தவர் கோடிக்கணக்கான பணங்களை வைத்துக் கொண்டு காசுக்கு வாக்குகளை பெறுவதற்காக தரகர்களை ஊருக்குள் இறக்கியுள்ளார். இவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது யாருக்குமே தெரியாது.
இவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒரு போதும் துணை நிற்க கூடாது என்பதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.

எனவே முஸ்லிம் புத்திஜீவிகள் இவர்கள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு எடுத்து கூறுவதன் மூலம் எமது சமூகத்தின் இருப்புக்களை பாதுகாக்க முடியும்.என மேலும் தெரிவித்தார் நயீம் இஸ்மாயில்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-