News Update :

Monday, June 8, 2020

TamilLetter

வாய்ப்புகளை சாதகமாக்குவதே புத்திசாலிகளின் கோட்பாடு – நயீம் இஸ்மாயில்

ஊடக அறிக்கை


இன்றைய அரசியல் கள சூழ்நிலை முன்னொரு போதும் இல்லாதவாறு பெரும் பான்மை சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தேர்தலாக மாறியிருக்கின்றது என முஸ்லிம் ஆளுமைக்கான இணையத்தின் செயலாளர் நயீம் இஸ்மாயில் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
அம்பாரை மாவட்டம் முஸ்லிம்களின் பெரும்பான்மை மாவட்டம் என்பதை வரலாற்று ரீதியாக அழித்தொழிப்பதற்கான இரகசிய வேலைத்திட்டத்தின் இறுதி முடிவாக இத் தேர்தல் அமையப்பெரும்.

நமது விரல்களைக் கொண்டு நமது கண்களை குத்துவதற்கான சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் அழகாக அரங்கேற்றியுள்ளது பெரும்பான்மை சமூகம். இதற்காகவே மொட்டு என்றும்>குதிரை என்றும் மயில் என்றும்  பெயர் சூட்டப்பட்டு எமது பகுதியில் உலாவ விட்டிருக்கின்றார்கள்.

அம்பாரை மாவட்டம் முஸ்லிம்களுக்குறியது என்று போராட வேண்டிய இக்காலப் பகுதியில் குதிரை ஒரு ஆசனத்திற்காகவும்,மயில் ஒரு ஆசனத்திற்காகவும் போராடும் துர்ப்பாக்கிய நிலைக்குள் எம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஆலமரத்தை குற்றம் சுமத்தி ஆளுக்கொரு கட்சியை தொடங்கியவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுத்தந்த உரிமை என்ன என்பதை அந்த கட்சிகளால் கூறமுடியுமா? 

த்தனையோ விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முகா மீது முன்வைத்தாலும் அக்கட்சியால் மாத்திரம்தான் எமது சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடிந்துள்ளதை காலங்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா?

தம்புள்ளை பள்ளிவாசல் அதாஉல்லா என்ன சொன்னார்.திகண பிரச்சினை அதாஉல்லா எங்கிருந்தார்>வட்டமடு பிரச்சினை. நுரைச்சோலை வீடுகள் எங்கிருக்கிறார் அதாஉல்லா.

இவற்றையெல்லாம் விட்டுவிடுவோம் இறுதியாக கொரனா ஜனாஸா ரிப்பு அதாஉல்லாவின் வகிபாகம் என்ன? அம்பாரை மாவட்டத்தில் அமைச்சராக வருவதுவே அவர்களுடைய தேர்தல் வாக்குறுதியாக உள்ளது.

அதே போல் ரிஷாட் இவரிடம் உள்ள பணங்கள் எப்படி வந்தது. பெரும்பான்மை சமூகங்கள் இவரை மட்டும் ஊழல்வாதிகளாக பார்க்க வில்லை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையுமே துரோகிகளாகவும் ஊழல் வாதியாகவுமே பார்ப்பதற்கு யார் காரணம். ரிஷாட்டை சுற்றி எல்லாம் நடப்பதென்றால் இது என்ன மாயம்.
ஒரு தனிமனிதன் சுகபோகமாக வாழ்வதற்கு இலங்கையில் உள்ள 20 இலட்சம் முஸ்லிம்களும் பாதிக்கப்பட வேண்டுமா?

எனவே அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டிய பொறுப்புள்ளது. எமது இருப்பு கேள்விக்குட்பட்டுள்ளதை இன்னும் ஏன் நீங்கள் உணரவில்லை.

இந்த மூன்று முஸ்லிம் கட்சிகளில் எக்கட்சியால் அம்பாரை மாவட்டத்தை வெற்றி கொள்ள இலகுவாக முடியும் என்பதை உங்களால் அறிய முடியாதா? எக் கட்சிக்கு சாத்தியமாக உள்ளதோ அக் கட்சியை பலப்படுத்துவதுதானே புத்திசாலித்தனம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-