ஏ.எல்.றமீஸ்
முஸ்லிம்களுக்கெதிரான முரண்பாட்டுத்தளத்தில் அசைக்க முடியாத கதா பாத்திரத்தை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வகித்து வருவதால் சர்வதேச விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் சகோதர சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூக பற்றாளர்களை ஆரம்பத்திலே கிள்ளி எறிவதன் மூலம் எதிர்கால செயற்திட்டங்களை இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என்பதே அவர்களின் இலகுவான கணக்காகும்.
மூன்றில் இரண்டு என்ற கணக்குகளோடு தொடங்கப்பட்ட பொதுத் தேர்தல் அறிவிப்பு கொரானா வடிவில் பல மாற்றங்களையும் வெற்றியின் சந்தேகங்களையும் ஏற்படுத்தி விட்டதானது மாற்று நடவடிக்கைகளை கையாள்வதற்கான யோசனையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஓர் அங்கமாக ஜனாஸா எரிப்பு தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களை விசாரித்தது பல சந்தேககங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தவத்தின் சமூக ஒற்றுமைக்கான விழிப்புணர்வும் அம்பாரை மாவட்டம் முஸ்லிம்களுடையது என்ற பலமான கோசமும் மாற்று கட்சியினருக்கு தலையிடியை ஏற்படுத்தியிருப்பது தவத்திற்கான தொடர்ச்சியான நெருக்கடியாக மாற்றம் பெரும் என்பதில் ஐயமில்லை..
தவம் அவர்களை அச்சப்படுத்தி அவரின் குரல்வலையை நசுக்குவதற்கான காய்நகர்த்தல்களை நம்மில் இருந்தே தொடங்கப்பட்டுள்ளது என்பது நமது சமூகத்திற்கான முற்றுப்புள்ளியாகும்.
எல்லைகள் கடந்து சமூகத்திற்காய் விழித்திருங்கள் செயற்படுங்கள்
எதிர்காலம் நம் கைகளில்