News Update :

Friday, June 5, 2020

TamilLetter

10 வருடங்களாக தோணியில் துணைக்குச் செல்லும் கொக்கு




 குடியிருப்புக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும், தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவருடன், தினமும் கொக்கு ஒன்று துணையாக தோணியில் சென்று வருகிறது. கடந்த பத்து வருட காலமாக இது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார் தனிக்கொடி சிவானந்தம். அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக சென்று வருகிறது.

“நான் குடியிருப்புக் குளத்தில் இருபது வருடங்களாக மீன்பிடித்து வருகின்றேன். பத்து வருடமாக இந்தக் கொக்கு என்னுடனேயே தோணியில் வருகின்றது. குளத்துக்குள்ளே நான் மீன்பிடிக்க இறங்குவதில் இருந்து தொழில் முடிந்து கரைக்கு வரும் வரை என் கூடவே இக்கொக்கு வருகின்றது. இந்தக் கொக்கு வேறு எவருடைய தோணியிலும் போய் அமர்வதில்லை” என்கிறார் சிவானந்தம்.

குளத்தில் மீன்பிடிக்க அவர் தோணியை எடுத்துக் கொண்டு செல்லும் போது, இவரைக் கண்டதும் அந்தக் கொக்கு பறந்து வந்து அவரது தோணியின் முன்பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது. அந்த மீனவர் போடுகின்ற சின்ன சின்ன மீன்களை உண்டு கொண்டு அவருடனேயே தோணியில் பயணம் செய்கிறது அந்தக் கொக்கு.
அந்தக் குளத்தில் பல மீனவர்கள் தோணியில் மீன்பிடிக்கின்ற போதிலும் எங்கிருந்தோ வருகின்ற ஒரு கொக்கு காலை, மாலை வேளையில் அந்த மீனவரோடு பயணம் செய்வதுதான் அதியமாக உள்ளது.
என்னோடு இந்தக் குடியிருப்புக் குளத்தில் எவ்வளவோ பேர் தோணியில் மீன் பிடிக்கிறார்கள். நிறையக் கொக்குகள் வருகின்றன. அவர்கள் போடுகின்ற சின்ன மீன்களை உண்டு விட்டுப் போய் விடும். ஆனால் இந்த ஒரு கொக்கு மட்டும் எனது தோணியில் எப்போதும் இருக்கும். நான் மீன்பிடித்து முடிக்கும் வரை என்னுடனேயே இருந்து விட்டு நான் கரைக்கு வந்ததும் பறந்து போய் விடும்” என்கிறார் சிவானந்தம்.
இந்த அதிசய கொக்கின் நடத்தையை இங்குள்ளவர்கள் வியப்பாகவே நோக்குகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-