ஏ.எல்.றமீஸ்
பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது.
அப்படி பாராளுமன்றம் ஒரு வேளை கூடினால் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதிவு செய்த கட்சிகள் மற்றும் சுயெட்சை குழுக்களால் தாக்கள் செய்யப்பட்டிருந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு மீண்டும் புதிய வேட்பு மனுக்களை கட்சிகள் மற்றும் சுயெட்சை குழுக்களிடமிருந்து தேர்தல் திணைக்களத்தால் கோரப்படும்.
ஏற்கனவே தாக்கள் செய்யப்பட்ட வேட்பு மனுவில் முன்னாள் அமைச்சர்களான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரீ.ஹஸனலி ஆகியோர் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நின்றனர்.
மீண்டும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தேர்தல் திணைக்களத்தால் கோரப்படும் சந்தர்ப்பத்தில் அத் தேர்தலில் மூத்த அரசியல் வாதிகளை உள்ளடக்கி வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரீ.ஹஸனலி ஆகியோர் தேர்தல் களத்தில் நேரடியாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை இடம் பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எந்தவித கொள்கையுமற்ற நிலையில் தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளதால் முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். அதாஉல்லா ரவூப் ஹக்கிமையும்,ஹக்கிம் ரிஷாட்டையும்,ரிஷாட் மஹிந்தவையும் விமர்சிப்பதே இத் தேர்தலின் அக் கட்சிகளின் கொள்கையாக உள்ளது.
இவற்றையெல்லாம் மாற்றியமைத்து மக்களுக்கு உண்மையான அரசியல் நிலைப்பாட்டையும், கொள்கையையும் எடுத்து செல்வதற்கே எதிர்வரும் பொதுத் தேர்தலை களமாக பயன்படுத்த உள்ளதாகவும் இதில் வெற்றியைத்தாண்டி மக்களுக்கு தெளிவுபடுத்துவதே பிரதான நோக்கமாகும் என தெரிவித்தனர்.