ஏ.எல்.றமீஸ்
எனது காலங்கள் கடந்து நிற்கின்ற இத்தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய குரலாக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை காண்கின்றேன். அதற்காகவே இத் தேர்தலில் அவரின் வெற்றிக்காக எனது பயணத்தை ஆரம்பிக்கிறேன் என முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
இன்று மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக இன்று மாலை அக்கரைப்பற்றில் சந்தித்த போதே இதனை இவ்வாறு தெரிவித்தார்.
வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மேலும் தெரிவிக்கையில் நான் அம்பாரை மாவட்டத்திலுள்ள பல நபர்களிடம் பொதுத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளேன் அவர்களில் அனேகமானவர்கள் சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாகவே அச்சத்துடன் உள்ளனர்.அதில் அவர்களின் ஆதங்கமாக இருப்பது பாராளுமன்றத்திற்கு சுயநலன்களை கடந்த சமூக வாதிகளை இம்முறை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அதுவே இன்றைய தேவையாகவும் உணரப்படுகின்றது.
எனவேதான் தனிப்பட்ட தேவைகள் முரண்பாடுகளை தள்ளி வைத்துவிட்டு சமூகத்தின் நன்மைக்காகவே இத் தேர்தலில் சுயமாக களத்தில் நின்று ஹரிஸ் அவர்களின் வெற்றிக்காக செயற்படவுள்ளேன்.
அதேவேளை தற்போது காணப்படுகின்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களோடும் கலந்துரையாடியுள்ளேன் அவரும் இணக்கத்துடன் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்.
அத்தோடு அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலம் இது என்பதை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் எதிர்வரும் பாராளுமன்றத்தில் நடக்க போவது கருத்தியல் யுத்தமாகும்.அந்த யுத்தத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அல்லது கூஜா தூக்கும் நபர்களை அனுப்பி வைத்துவிட்டு சமூகம் துயரங்களை சந்திக்க முடியாது.
கட்சி,பிரதேச வாதங்களை கடந்து நின்றே சமூகத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும்.அதன் மூலமே நமது எதிர்காலம் தங்கியுள்ளது என சேகு இஸ்ஸதீன் மேலும் தெரிவித்தார்.