குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35வயதுடைய பொத்துவிலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் காலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திழர சிகிச்சையின் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் இரு ஆண் குழந்தைகளும் தலா 1910 கிராம் மற்றும் பெண் குழந்தை 1480 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளன
.