இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.
தலங்கமா மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு முன்பு காலமானார் என்று மருத்துவமனைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அவர், கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக காலமாகும்வரை இருந்தார்.