ஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்
ஏ.எல்.றமீஸ்
எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணால் அந்த இடத்தை அடைய முடியும்.அதிலும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருக்கின்ற வைத்தியத் துறையில் ஒரு பெண் தலைமை தாங்குவது என்பது அசாத்தியமானது.
தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் நன்கு அறிந்து வைத்திருப்பதோடு புதிய தகவல்களை உள்ளீர்ப்பதில்தான் தனது தலைமைத்துவத்திற்கு எதிரானவற்றை உடைத்தெறிந்து கொள்கை ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்த முடியும் என்பதற்கு டாக்டர் பறூஸா நக்பரின் நிர்வாகத் திறமை பறைசாட்டுகின்றது.
உலகமே புதிய கொரனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தனது நிர்வாக எல்லைக்குள் வாழும் மக்களை பாதுகாப்பதற்கு தன்னந்தனியாள இரவு பகல் பாராமல் தைரியத்தோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் வைத்திய அதிகாரியை பாராட்டாமல் இருக்க முடியாது.
அக்கரைப்பற்றில் பிரதேச செயலகம்,மாநகர சபை,பிரதேச சபை,பொலிஸ் நிலையம் என எத்தனையோ அரச திணைக்களங்கள் இருந்தாலும் பிரதேச வைத்திய அதிகாரிக்கான பொறுப்புக்கள் அதிகமானது.அந்த பொறுப்புக்களை கச்சிதமாக செய்து முடித்த மற்றும் முடித்துக் கொண்டிருக்கின்ற அவரின் பணி சிறப்பானது.
ஓவ்வொறு மக்களும் ஒவ்வொறு பிரச்சினைகளை முன்வைக்கும் போது அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது என்பது இலகுவான காரியமல்ல. பல விமர்சனங்களையும்,நையாண்டித்தனங்களையும் தினமும் சந்திக்கின்ற சூழ்நிலைக்குள் அகப்பட்டும் மன தைரியத்தொடு டாக்டர் பறூஸா நக்பர் அவற்றுக்கு முகம் கொடுத்ததை பார்க்கக் கூடியதாகயிருந்தது.
சிலர் அரசியலுக்காக காய் நகரத்திய போதும் நீதிமன்றம் சென்று தனது பணியை தொடர்ந்தது அவரின் ஆளுமைக்கு சிறந்த உதாரணம்.