News Update :

Friday, May 8, 2020

TamilLetter

தவத்தின் முயற்சிக்கு பாராட்டி கைகொடுப்போம்

சிவில் சமூக மட்டத்திலிருந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம்!
ஒரு இலட்சம் கையொப்பம் பெறல்.......
********************************************************
தூக்கம் தொலைந்து நீண்ட நாட்களாயிற்றுபடுக்கை முழுவதும் நெருப்பு எரிகிறது
எரிக்கப்பட்டவர்கள் ஒரு தரம்தான் எரிந்தார்கள்
நாம் ஒவ்வொரு நாளும் எரிந்து கொண்டிருக்கிறோம்
மனதின் எரிவை எது கொண்டும் ஆற்றிட முடியாது
தீக்காயங்களுடன் உணர்வுகள் பதறுகின்றன
உள்ளங்கள் சாம்பலாகி சிதறிக்கிடக்கின்றன
அதன் மீது நின்று வாழ பிடிக்கவில்லை
இயங்குதல் இல்லாத பாத்திரம் மிகக்கொடுமையானது
உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது
ஜடமாய் கிடப்பதில் உடன்பாடு இல்லை
எங்கிருந்தாவது தொடங்க வேண்டும்
எதுவென்று மூளையை கசக்கியும் விடைகள் தூரமாயேவுள்ளன
சும்மா குந்தியிருந்து எதுவும் நடக்காது
களம் குதிப்பதை தவிர வேறு வழியே இல்லை
சமூக மட்டத்திலிருந்தும் அழுத்தம் வேண்டும்
அது அடிமனதையும் தொட வேண்டும்
இப்படிச் செய்தால் என்ன என்று பல யோசனைகள்
சிலதை கழித்த பின் ஒன்றிரண்டே சாத்தியமாய் தெரிந்தது
அப்படி ஒன்றுதான் இது
இது சமூக ஒற்றுமைக்கு ஒரு வழி
ஒரே குரலில் பேச நல்ல மொழி

ஆம்.......
கோவிட் - 19 யினாலோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தினாலோ - மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியூட்டாமல் நல்லடக்கம் செய்யுமாறு கோரி - அழுத்தம் கொடுப்பதற்காக - அம்பாரை மாவட்டத்தில் ஒரு இலட்சம் கையொப்பத்தினை பெற்று - அரசிற்கு கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது சமூகத்தில் இருக்கும் எல்லா தரப்பினரதும் கருத்து வேறுபாடுகளை களைந்து - அரசியல் பேதங்களை மறந்து - ஒன்றாக பயணிப்பதற்கான வழி மாத்திரமன்றி - ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவது என்பது - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினும் வேண்டுகோளும் எதிர்பார்ப்புமாக இருப்பதை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழியாகவும் அமையும்.
எனவே, இந்த விடயத்திற்கு எல்லோரும் திறந்த மனதோடு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள். இதனையே ஏனைய மாவட்டங்களுக்கும் பரவலாக்குவதற்கான ஒரு முன்னோட்டமாகவும் இதனை செய்து பார்ப்போம். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கையொப்பங்களை பெறுவதினூடாக - சனங்கள் கூடுவதை தவிர்த்து - இந்த சவால்மிக்க பணியை நிறைவேற்றுவோம்.
ஒவ்வொரு ஊரிலும் வீடு வீடாகச் சென்று கையொப்பங்களை பெறுவதற்கு தொண்டர்கள் பரந்தளவில் தேவைப்படுகிறார்கள். இதற்கு பங்களிப்பு செய்ய விரும்பும் - சமூக நலனில் அக்கறையுள்ள கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட சகோதரர்கள் எம்மோடு தொடர்புகொள்ளுங்கள். முன்கூட்டியே உங்கள் பெயர்களை பதிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வான்.
தொடர்புகளுக்கு:- 0772920160, 0773178783, 0775388776, 0777007185, 0770737007, 0773989431
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இதற்கு அனைவரும் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கி - நமது சமூகத்திற்கான இந்த பயணத்தில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள். வழக்கு பதிவுசெய்யும் ஏக காலத்தில் சிவில் சமூக அழுத்தத்தையும் நாம் வழங்குவோம். அல்லாஹ் நமது எல்லோருடைய சுமைகளையும் இறக்கிட பிரார்த்தனை செய்யுங்கள்.
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்
- ஏ.எல்.தவம் -
(தயவுசெய்து இதனை அதிகம் அதிகம் பகிருங்கள். தகவல் பரவலாக போய் சேரட்டும்)

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-