News Update :

Wednesday, May 27, 2020

TamilLetter

உலகளாவிய நிலையில் கோவிட் தொற்று 57லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு 352,750பேர் உயிரிழந்தனர்



லண்டன், மே 27 – உலகளாவிய நிலையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,709,526 ஆக உயர்ந்தது. இந்த உயிர்கொல்லி தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 352,750பேராக அதிகரித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வூஹன் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா , பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். அதே வேளையில் மனுக்குலத்திற்கு உலகம் முழுவதிலும் கோவிட் தொற்று பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகிறது.


கோவிட் தொற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது . அந்நாட்டில் இதுவரை 100,625பேர் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 533பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். . இதுவரை அமெரிக்காவில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையும் 1,725,808 ஆக அதிகரித்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-