குல்ஸான் எபி
கொரனா அச்சுறுத்தல் தொடரந்த வண்ணம் இருக்கின்ற சூழ்நிலையில் மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அது இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் எல்லோருமே எல்லாரிடமும் எதிர்பார்க்கின்ற சந்தர்ப்பங்களாகவே மாறிவிடும் என்ற அச்சம் எம்மை ஆட்கொள்கின்றது.
அரசியல்வாதிகள் எங்கே என தேடிக்கொண்டிருக்கின்றார்கள் மக்கள் சில பிரதேசங்களில் பாராட்டப்படுகின்ற அளவுக்கு சில அரசியல்வாதிகள் மக்களுக்கான பணியை செய்து வருவது பாராட்டத்தக்கது.
குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் அதிகமான அரசியல் வாதிகள் காணப்பட்ட போதும் மக்களுக்கான எந்தவித பணியையும் அவர்கள் செய்யவில்லை என்ற தோற்றப்பாடு மக்கள் மத்தியில் எழுகின்றது.
பல வருடங்கள் அமைச்சராகவும்>பாராளுமன்ற உறுப்பினர்களாகவும்>மாகாண சபை உறுப்பினராகவும்>பிரதேச சபையின் தவிசாளராகவும் அதன் உறுப்பினராகவும் இருந்தவர்கள் இம் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பது கேள்வியே
சில அரசியல் வாதிகள் அரசாங்க நிதியுதவி>தனவந்தவர்களின் உதவி>சமூக அமைப்புக்களின் உதவிகளை தான் வழங்குவதாக கூறி நிவாரணப் பொருட்களை கையளித்து முலாம் பூசிக்கொள்வதை அசிங்கமாக பார்க்க வேண்டியுள்ளது.
ஒரு சில அரசியல் வாதிகள் இப்போதைக்கு தேர்தல் நடைபெற மாட்டாது. ஆனால் தேர்தல் காலங்களில் இப்பணத்தை செலவு செய்வதன் மூலம் வாக்குகளை பெற முடியுமென்ற கணக்குகளை அழகாக காட்டுகின்றனர்.
இப்படியான சந்தர்பங்களில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது.
அளுத்கம பிரச்சினை என்றாலும் அவர்தான்>அம்பாரை பள்ளி பிரச்சினை என்றாலும் அவர்தான்>அமைச்சை இராஜீனமா செய்ய வேண்டுமென்றாலும் அவர்தான்>கல்முனை பிரச்சினை என்றாலும் அவர்தான்> எதிர்க்கட்சிக் காரர்களுக்கு பிரச்சினை என்றாலும் அவர்தான் குரல் கொடுக்க வேண்டும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஆசனங்களை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக கட்சி தலைவர்களிடம் அங்கும் இங்கும் அலைந்து திரிபவரும் அவர்தான். இப்போதைய நிலையில் நிவாரணம் வழங்குவதென்றாலும் அவரால்தான்; முடியம் என்பது மக்களின் நம்பிக்கையாக மாறி கொண்டிருக்கின்றது.
அம்பாரை மாவட்டத்தில் பொத்துவில் இறக்காமம் அட்டாளைச்சேனை >அக்கரைப்பற்று>நிந்தவூர்>சாய்ந்தமருது>கல்முனை>மத்திய முகாம்>சம்மாந்துறை பிரதேசங்களில் வாழுகின்ற பல்லாயிரம் குடும்பங்களுக்கு ஹரிஸின் சொந்த நிதியிலிருந்து உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அத்தோடு உணவுப் பொருட்களை பொதியிடுவதிலிருந்து வாகனத்தில் ஏற்றி பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்ற களப்பணியையும் முன்னாள் எம்.பி ஹரீஸ் செய்து கொண்டிருப்பது எமக்காக ஹரீஸ் என்பது புலனாகின்றது.