பிர்னாஸ்
கொரனா தொற்று நோய் தாக்கம் காரணமாக நாடு பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந் நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அரசாங்கம் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு அங்கமாக நாடு பூராகவும்கவும் ஊராடங்க சட்டம் அமூல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இப்படியான நிலையில் தனது பிரதேசத்தில் வாழும் மக்களின் நலன் கருதி அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான நிவாரணத்தை பிரதேச சபையின் நிதி மூலம் வழங்குவதெனவும் இதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட 32 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 5 ஐந்து இலட்சம ரூபா வீதம் உணவுப் பொதிகள் கொள்வனவு செய்யப்பட்டு பகிர்ந்தளிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் நிவாரணப் பணிகள் இதுவரையும் மக்களுக்கு வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்த பிரதேச சபையின் சில உறுப்பினர்கள் தவிசாளர் மற்றும் செயலாளரிடம் இது தொடர்பாக வினவிய போது திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என்பதோடு பொறுப்பற்ற விதத்தில் பேசியதாகவும் எமது செய்திச் சேவைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார் ஒரு பிரதேச சபை உறுப்பினர்.
குறிப்பிட்ட பிரதேச சபை உறுப்பினர் மேலும் எம்மிடம் தெரிவிக்கையில் இத்திட்டத்தை கைவிடுமாறு ஒரு அரசியல்வாதி தவிசாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதா தான் அறிவதாகவும் இதன் காரணமாகவே இத்திட்டம் மந்த கதியில் சென்று கொண்டிருப்பதாக பிரதேச சபை உறுப்பினர் கவலைப்பட்டு எம்மிடம் தெரிவித்தார்.