News Update :

Saturday, March 21, 2020

TamilLetter

ஆட்கொல்லி நோய்பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுங்கள்



முக நூல் நண்பர்களே! இப்போதைக்கு அரசியலை விடவும் பாரிய ஆட்கொல்லி நோய்க்கு மக்கள் எவ்வாறு முகம்கொடுப்பது பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுங்கள் அத்துடன் ஊரடங்குச் சட்டத்தினையும் மதித்துச் செற்படடுங்கள் என தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதி கொள்கை பரப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிப்கான் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் செயற்படுவதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பும் வழங்குவது காலத்தின் தேவையாகும்.
நமது நாட்டிலும் சுமார் 77 பேர் வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள் இதனைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசும் கொரோனா தொற்றின் தீவிரத்தில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது அரசாங்கம் மேற் கொண்டு வரும் சகலவிதமான நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குகள், இத்தாலியில் கொரோனா தொற்று தீவிரமடைந்தமைக்கு காரணம் அந் நாட்டு மக்கள் அரசின் சட்டதிட்டங்களை பொருட்படுத்தாமையே காரணமாக சொல்லப்படுகிறது.
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனா தொற்று பரவுவதனால் யாரும் அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள், வெளியில் இருந்து வீட்டுக்கு வரும் போது அவசியம் உங்கள் கை-கால்களை சவர்க்காரம் கொண்டு நன்கு தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.சுத்தம் எப்போதும் சுகம் தரும்.
இப்பிராந்தியத்தின் இவ்வாறான இக்கட்டான காலத்தில் அரசியல் பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை தவிர்த்து கொரானா உயிர் ஆபத்திலிருந்து மக்களை மீட்க அனைவரும் முன் வாருங்கள்.
எமது தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்டத்தின் தேசிய காங்கிரஸின் தலைமை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும், மூவின மக்களின் ஒற்றுமைக்காகவும் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-