முன்னாள் அமைச்சர் ஹரீஸின் நாகரிகமான செயற்பாடுகளுக்கு பாராட்டுகள்
ஆர். குல்ஸான் எபி
இதற்கிடையில் சில கட்சிகளும் சில அரசியல்வாதிகளும் பாராளுமன்ற தேர்தலில் எப்படி நாம் வெற்றி கொள்ளலாம் என்பது தொடர்பான சிந்தனைகளுக்குள் அவர்கள் மூழ்கி கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் முன்னாள் இராஜாக அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அரசியலைத்தாண்டி மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்ப வேண்டுமென்பதில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளார்.
இளைஞர்கள் அரசியல் ரீதியான கருத்துக்களையும் அதனோடு ஒன்றுபட்ட முரண்பாடுகளையும் முகநூல்களில் பதிய விடுவதன் மூலம் நமக்கான பிரிவினைவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது பெரும் ஆபத்தாகும்.
நாடு எதிர் நோக்கியிருக்கின்ற இக்கட்டான நிலையில் மிகவும் கண்ணியமாகவும் மக்களை பாதுகாப்பதிலும்தான் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.
நமது பிரதேசத்தில் அச்சத்துக்குள்ளான மற்றும் ஏதாவது உதவிகள் தேவைப்படுகின்ற மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் முன்வந்துள்ளார்.
எமது நாட்டு மக்கள் கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லோரும்; செயற்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று ஊடாக மாநாட்டை ஏற்பாடு செய்து தெளிவுபடுத்தியிருப்பது நாகரிகமான சமூக இலக்கை அடைவதற்கான வழிமுறைகளாக பார்க்கப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதி தன்னுடைய சட்ட ரீதியான அதிகாரத்தை பயன்படுத்தி அவசரகால சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தை கூட்டி பொதுமக்களின் நலன் தொடர்பாக சர்வ கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று கொரணாவுக்கு எதிராக செயற்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கையையும் முன் வைத்தார்.