News Update :

Thursday, February 20, 2020

TamilLetter

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.எம். அஜ்வத்

கழுதை தேய்ந்து கட்டெரும்பாகும் சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ்
 

எஸ்.எம். அஜ்வத்



ஒரு அரசியல் இயக்கம் தனது சமூகம் சார்ந்த உரிமைகளுக்காக போராடுவதோடு தமக்கு கிடைக்கும் அதிகாரங்களை எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிப்பதன் ஊடாகவே அவ் இயக்கம் நிலைத்திருக்கின்ற தன்மையை பெருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச.எம்.அஷ்ரப் பிறந்த சம்மாந்துறை பிரதேசம் பெரும் வாக்காளர்களைக் கொண்டிருந்த போதிலும் அம் மக்களின் நம்பிக்கையை முஸ்லிம் காங்கிரஸினால் பெற்றுவிட முடியாமல் போய்விட்டது.

சுமார் 45 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட பெரும் பிரதேசத்தில் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி  முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 11 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. இக் கட்சியைவிட எதிரணியினர் அதிகமான வாக்குகளை தன் வசப்படுத்தி சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகாரங்களை தன்வசப்படுத்தியிருந்தன.

 இப்படியான தோல்வி  முகாவுக்கு மதல்முறையல்ல எதிர்கட்சி தரப்பினர்கள்தான் தொடர்ச்சியாக சம்மாந்துறையின் உள்ளாட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது மறைக்க முடியாத உண்மை.

 இப்படியான சூழ்நிலையில் முகாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அவர்களின் வெளியேற்றம் அக்கட்சியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளதாக கூறப்படுவதோடு எதிர்வரும் பொதத் தேர்தலில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே முகாவால் பெற முடியும் என பொதுமக்களின் கருத்தாகவும் உள்ளது.

முகா தொடர்ச்சியான தோல்வியை அப்பிரதேசத்தில்  பெற்றுவருவதற்கான பிரதான காரணம் என்ன என்பதுவே ஆயிரம் ஆயிரம் கேள்விகள். சம்மாந்துறை பிரதேசத்தின் முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் ஒரு நபரை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக கட்சிக்க புதிய ஆளுமையுள்ள தலைவர்களையும்,இளைஞர்களையும்,சமூகவியலாளர்களையும் உள்வாங்குவதில் தமது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதுவே இங்கு பிரதான பங்குவகிக்கின்றது.

சாவு வீட்டில் பிணமாகவும் திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும் நானே இருக்க வேண்டமென்பதுவே முகாவின் உள்ளுர் தலைவரின் நிலைப்பாடு. இதற்கு ஏற்றாப்போல் கட்சியும் செயற்படுகின்றது. பிரதேச சபைத் தவிசாளர் என்றாலும் சரி,மாகாண சபை உறுப்பினர் என்றாலும் சரி, மாகாண அமைச்சர் என்றாலும் சரி, ஏன் பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும் ஒரு நபருக்கே அச் சந்தர்ப்பத்தை வழங்கி வருவது மக்களையும் சமூகத்தையும் எறிச்சலடைய வைத்துள்ளது.

தான் கட்சியின் மூத்த போராளி, கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாகவுள்ளேன் உள்ளேன் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதுவே இவரின் வாசக மகுடமாகவுள்ளது.இதுவே முகாவின் தேய்தலுக்கு பிரதான பங்காற்றுகின்றது.

இருந்த போதும் சம்மாந்துறை பிரதேசத்தில் முகாவின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொறுப்பு அக் கட்சியின் தலைமைக்கும் உண்மையான போராளிகளுக்கும் உண்டு.

சம்மாந்துறை மண்; பல சமூகவியலாளர்களையும், கல்வியாளர்களையும் கொண்டுள்ளது. இவர்களை இனம் கண்டு முகாவில் இணைத்துக் கொள்ள வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பு கட்சிக்கு இருக்கின்றது.  அப்படியான நிலையில் சமூகவியலாளரும் பொறியிலாளருமான உதுமான்கண்டு நாபீர், சிறாஜ், கலந்தர் முகைதீன் போன்றோர்களை உள்ளீர்ப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என அம் மக்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில்   பொறியிலாளர் நாபீர் அவர்களை சம்மாந்துறை பிரதேசத்தின் பொதுத் தேர்தல் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென்பதற்காக  பல கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் முகாவில் நாபீர் இணைவதின் மூலமே பலமான கட்டமைப்பை  அப்பிரதேசத்தில் ஏற்படுத்த முடிவதோடு மக்களும் நம்பிக்கையோடு கட்சியில் இணைந்து கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக கட்சியின் மூத்த போரளிகள் கூறிவருகின்றனர்..

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-