News Update :

Tuesday, January 28, 2020

TamilLetter

தமிழ் தேசிக் கூட்டமைப்பு போன்று முஸ்லிம் கட்சிகள் ஒரு அணியின் கீழ் ஒன்றுபட வேண்டும்

முஸ்லிம் கட்சிகள் ஒரு அணியின் கீழ் ஒன்றுபட வேண்டும்

ஏ.எல்.றமீஸ்

பெரும்பான்மை சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்;ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் கட்சிகள் ஒருகுடையின் கீழ் அணிதிரள்வது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கை முஸ்லிம்களின் இதயமாக கருதப்படும் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம் மாவட்டத்தில் தேர்தல் மூலம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும், இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்ற நிலையில் இம்முறை (2020 ஆம் ஆண்டு) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளை மாத்திரமே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அம்பாரை மாவட்டத்தின் பொதுத் தேர்தல் முடிவானது இலங்கை முஸ்லிம்களுக்கு பாரியதொரு பின்னடைவையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆகவே அம்பாரை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை தக்கவைப்பதில்தான் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் அரசியல் கேள்விக்குட்பட்ட நிலையில் அதை மேலும் சிதைத்து விடுவதற்கான முயற்சியில் ஒரு சில சுயநல முஸ்லிம் அரசியல் வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தனது ஒருகண் பறிபோனாலும் பரவாயில்லை எதிரியின் இரண்டு கண் கெட்டு விடுவதில் சந்தோசப்படும் சில உள்ளுர் அரசியல் வாதிகளால் நமது சமூகம் இன்னொறு அழிவை சந்திக்கப் போவதை தடுத்து நிறுத்த வேண்டியது பொது மக்களின் கடமையாகும்.

அம்பாரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ,ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பு,ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பிரிவு,பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்று ஏகப்பட்ட கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களம்காண காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்படியான கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் இவர்களை வழிநடாத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மக்களுக்க உள்ளது. ஏனென்றால் இக்கட்சித் தலைவர்கள் தனது கட்சி சார்ந்த நலன்களிலும் தமது அதிகாரத்திற்காகவும்தான் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர். இக்கட்சிகளின் தனிப்பட்ட முடிவுகளால் முஸ்லிம் சமூகமே பெரிதளவில் பாதிக்கப்படப் போகின்றது. அதை தடுப்பது முஸ்லிம் பிரமுகர்களினதும்,புத்திஜீவிகளினதும்,சிவில் அமைப்புக்களினதும் கடமையாகும்

கட்சிக் கொள்கைகள்.தலைமைத்துவ பிரச்சினைகள் என பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ் தேசிக் கூட்டமைப்பு போன்று ஒரு குடையின் கீழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு இத் தேர்தலை சந்திக்க வேண்டும். அத்தோடு இக் கூட்டில் இணைய மறுக்கின்ற இச் சமூக ஒற்றுமைக்கு எதிராக தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்ற கட்சிகளையும் தலைவர்களையும் சமூக துரோகிகளாக கருதி அவர்களை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-