ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பதவியான தவிசாளர் பதவிக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கட்சியின் ஸ்தாபக செயலாளரும் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கட்சியின் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டின் போது இவ் நியமனத்தை எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானி;க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளராக பதவி வகித்து வந்ததுடன் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்தார்.
தலைவர் அஷ்ரப் அவர்களின் நம்பிக்கைக்குறியவராக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் இருந்து வந்ததன் காரணமாக கட்சியின் தேசியப்பட்டியலுக்காக முதலாவது நபராக இவருடைய பெயரை தலைவர் அஷ்ரப் அவர்கள் தெரிவு செய்து தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.