இந்நிலையிலேயே ரஜினி காந்துக்கு விசா மறுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை வௌியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தாம் சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய இரு உயர்ஸ்தானிகராலயங்களிலும் இந்த விடயம் குறித்து விசாரித்தாகவும் அவ்வாறான எவ்வித சம்பவங்களும் இடம்பெறவில்லையெனவும் வௌியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ரஜனிகாந்திடமிருந்து தமது உயர்ஸ்தானிகராலயங்களுக்கு எவ்வித விசா கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் ரஜினிகாந்துக்கு விசா வழங்க மட்டோம் என இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சு எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.,