நாட்டை நேசிப்பவரகளும் இனங்களுக்கிடையில் சமாதானத்தை கட்டியெழுப்புகின்றவர்களுமே எதிர்வருகின்ற ஆட்சியில இடம்பெற வேண்டுமென புத்திஜீவிகளும் பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இனரீதியான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி அம்மக்களை நாட்டிற்கு எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர்.அந்த வகையில் சில சிறுபான்மை கட்சிகள் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு நாட்டின் ஸ்தரத்தன்மையை சீர்குலைவதற்கு காரணமாக இருந்து வருகின்றனர்.
நாட்டில் நிலையான ஆட்சியொன்று அமையக் கூடாது என்பதில் நாட்டிற்கு எதிரானவர்களோடு இணைந்து போலியான பிரச்சாரங்களை பரப்பி மக்களை முரண்பாட்டுத்தன்மைக்கு இட்டு வருவதை கடந்த காலங்களில் காணக்கூடியதாக உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு அம்மக்களை அநாதையாக்கிவிட்டு தலைவர்கள் மாத்திரம் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.
சிறுபான்மை சமூகத்தின் சில தலைவர்கள்hன டக்ளஸ் தேவானந்த, அதாஉல்லா, ஆறுமுகம் தொண்டமான், போன்றவர்கள் நாட்டை நேசிப்பதன் காரணமாகவே உண்மையின் பக்கம் நிற்கின்றனர்.
அதால்லா அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.அதாஉல்லாவை வெற்றி பெற வைப்பது என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உள்ள பணியல்ல. அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த சிங்கள வாக்காளர்களும் அதாஉல்லாவுக்கு வாக்களிப்பது கட்டாய கடமை என ஒவ்வொருத்தரும் உணரவேண்டும். என தமன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் சிறிவர்த்தன கூறிப்பிட்டார்.