நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பிரபலமான பல கதாபாத்திரங்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களில் அதிகமானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
அதற்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிவுள்ளார்.
வட மாகாண ஆளுநராக முரளிதரளை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச முயற்சித்த போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளார்.
ஆளுநராக செயற்பட முரளிதரன் மறுத்த போதும், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் தான் போட்டியிடுவதாக முரளி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருக்கும் நுவரெலியா மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளை பொதுத் தேர்தலில் கைப்பற்றுவதற்கு பொதுஜன பெரமுன எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை, கிரிக்கெட் வீரர் டீ.எம்.டில்ஷான் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளார். அவரும் மஹிந்த தலைமையினால் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.