News Update :

Friday, December 6, 2019

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய நபர்கள் மஹிந்தவுடன் - தடுமாறும் ஹக்கிம்

எஸ்.எம்.சபீர்

ஜனாதிபதித் தேர்தலில் கோட்பாய வெற்றி பெற்றதையடுத்து சிறுபான்மை கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தமது அரசியல் பிரமுகர்களை தக்க வைப்பதில்  பெரும் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.

முஸ்லிம் அரசியல் வாதிகள் அமைச்சு பதவியில்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை உண்மைப்படுத்தும் பல சம்பவங்கள் இப்போது அறங்கேறிவருகின்றன.

தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசோடு இணைந்து கொள்வதற்கு முன்பே தாம் இணைந்து கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டை முஸ்லிம் தலைமைகள்  எடுத்த போதும் ஆளும் மஹிந்த அரசு இவர்களை உள்வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இருந்த போதும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களை தன்னிச்சையாக உள்வாங்குவதற்குறிய வேலைத்திட்டத்திலும் மஹிந்த தரப்பினர் இறங்கியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய சில பிரமுகர்கள் மொட்டுக் கட்சியுடன் இணைவதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவதற்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தலைவர் ரவுப் ஹக்கிம் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வருவதனால் பெரும்பான்மை சமூகத்தினரால் முஸ்லிம் சமூகம் துரோகியாக பார்க்கப்படுகிறது.

அத்தோடு இனி ஐக்கிய தேசியக் கட்சியால் 2030ம் ஆண்டுவரை எந்த அதிகாரத்தையும் பிடிக்க முடியாத நிலையில் முஸ்லிம்களின் அபிவிருத்தி வேலைவாய்ப்பு  போன்ற விடயங்களை எப்படி கையாள முடியும்.எனவேதான் ஹக்கிமுக்கு பின்னால் சென்றால் முஸ்லிம் தமிழ் சமூகம் இழந்ததைவிட அதிகமாக இழக்க நேரிடும் என்பதனால்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-