தொடரச்சியாக பொய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் காரொன்று அடித்து செல்லப்பட்டுள்ளது.
கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த
வெள்ளத்தில், குறித்த கார் சிக்குண்டது. காரை செலுத்திய சாரதி பல்வேறு
சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சாரதி, காரை குத்தகைக்கு எடுத்து சென்ற சந்தர்ப்பத்தில்,
அப்பகுதியில் திடீரென அதிகரித்த வெள்ளம் காரணமாக இந்த சம்பவம்
நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சாரதி, கிளிநொச்சி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்குண்ட கார் பிரதேச இளைஞர்களின்
கடும் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளது.