News Update :

Wednesday, December 4, 2019

TamilLetter

தொடர்ந்தும் நிலையான ஜனாதிபதியாக கோட்டபாய - தமிழ் கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீநேசன்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக அவர்களுடன் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளோம். சரணாகதி அடைவதாக கூறவில்லை. சராசரி நிலையில் இருந்துகொண்டு செயற்படுவதற்கு தயாராகவுள்ளோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தேர்தல் வெற்றியை கண்ணியமாக கொண்டாடுமாறு கூறியமை, பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்தமை உள்ளிட்ட பல விடயங்கள் வரவேற்கக்கூடியவை.

 இதேபோல தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பாராகவிருந்தால், நிலையான ஜனாதிபதியாக அவர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது - என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-