News Update :

Tuesday, November 5, 2019

TamilLetter

கோட்டபாய இலகுவான வெற்றியைப் பெருவார் - கணக்கு காட்டும் அதாஉல்லா

ஏ.பி.பஸ்மிர்

சிங்கள பிரதேசங்கள் மாத்திரமல்ல தமிழ் பிரதேசங்களில் கூட பெருமளவிலான வாக்குகள் இம்முறை கோட்பாய ராஜபக்ஸவுக்கு வழங்கவதற்கு மக்கள் தயாராகி வருகின்றார்கள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்பாய ராஜபக்ஸவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலே இதனை இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியசத்தில்தான் மைத்திரி வெற்றி பெற்றார். இந்த வாக்குகளை மேலதிகமாக பெறுவதற்கு பலபேரின் உழைப்புக்களும்,வெளிநாட்டு சக்திகளின் உதவிகளும்,ஊடகங்களின் போலியான பிரச்சாரங்களுமே பிரதான பங்காற்றியது.

2015ம் ஆண்டில் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவ வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியோடு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் என சுமார் 73  அமைப்புக்கள் மைத்திரியோடும் ரணிலோடும் இணைந்து அன்றைய தேர்தல் களத்தில் களம்கண்டன.

புனிதமான அரசியல் பயணம் எனக் கூறிக்கொண்ட இவ்அமைப்புக்கள் மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரின் நிர்வாக சீர்கேடு,சட்ட ஒழுங்குப் பிரச்சினை,பாரிய ஊழல் முறைகேடு,இனங்களுக்கிடையில் முரண்பாட்டுத்தன்மையை தோற்றிவித்தல் என ஏராளமான மோசடிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த தேர்தலில் நாம் விட்ட தவறை நாட்டின் நலன்கருதி மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதில் ரணிலோடு அன்று இணைந்தவர்கள் இன்றைய தேர்தலில் பிரிந்து நின்கின்றனர்.

அன்று இணைந்து தனது ஆதரவை வழங்கிய மக்கள் விடுதலை முன்னணி தனியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். சுமார் ஏழு இலட்சம் வாக்கு வங்கியை கொண்டுள்ள இவர்கள் தனியாக போட்டியிட முடிவுவெடுத்த தருணமே சஜீத் பிரேமதாஸாவின்  தோல்வி நூறு வீதம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

அதேபோல் அன்று தலைமைதாங்கி ஜனாதிபதித் தேர்தலை நடாத்திய துமிந்த திஸாநாயக்கா போன்ற முக்கிய அமைச்சர்கள் மற்றும் வடகிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற பைஸர் முஸ்தபா போன்ற பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கூட கோட்பாயாவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்கின்றனர். 
அதுமட்டுமா? தமிழ் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் 98 வீதவாக்குகளை அள்ளிவழங்கிய போதும் ரணிலின் அரசாங்கத்தினால் பெற்றுக்கொண்ட அவஸ்தைகளுக்கு பரிகாரம் தேட முற்பட்டுவிட்டனர். இதன் பிரதிபலிப்புக்களே கோட்டபாயவின் பக்கம் சிறுபான்மைச் சமூகங்கள் சாய்ந்து நிற்க முடிவெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம்,வவுணியா,மட்டக்களப்பு போன்ற முக்கிய தமிழ் பிரதேசங்களில் வாழுகின்ற சாதாரண மக்கள் தழிழ் தேசிய கூட்டமைப்பின் கபடநாடகங்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். ஒரு வருடத்திற்குள் தீர்வுபெற்றுத்தருவோம் என்றவர்கள் ஐந்து வருடம் கழித்தே ஊருக்கு வருகின்றார்கள் என மக்கள் கோசம் எழுப்பி தாய்மார்கள் வீதியில் இறங்கி விரட்டுகின்ற நிலைமை அங்கு மாறியுள்ளது.

இப்படியாக ஒவ்வொறு பிரதேசங்களாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்களை பெரும்பான்மை சமூகத்திடம் காட்டிக் கொடுப்பதற்கு ரவூப் ஹக்கிமும் ரிஷாட்டும் சர்வதேசத்தின் கைக்கூலியாக மாறி எமது பிரதேசங்களில் முகாமிட்டுள்ளனர்.முதலில் இவர்களை இப்பிராந்தியத்தில் இருந்து விரட்டுவதால் மாத்திரமே முஸ்லிம் சமூகம் பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் வாழுகின்ற சூழல் உருவாகும்.

எனவே ஆட்சிமாற்றத்திற்கு தாயராகியுள்ள பெரும்பான்மை சமூகத்தோடு முஸ்லிம் சமூகம் இணைந்து கொள்வதன் மூலமே நிம்மதியான வாழ்க்கையையும் நமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்று மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-