மக்களுக்கு தன் கொள்கைகளையும் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கே ஊடகங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அநாகரிகமற்ற செயற்பாடுகளை பொதுவெளியில் காட்ட முனைவது ஆரோக்கியமானதாக பார்க்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் அப்துல் பாஸீத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் பதில்களினால் தடுமாறிய முன்னாள் அமைச்சர் மனோ கனேஸன் ஆவேசப்பட்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது தண்ணீரை வீசினார். இச்செயலை வண்மையாக கண்டிக்கிறேன்.
கருத்தை கருத்தினால் எதிர்கொள்வதே மனித நாகரிகம். நாகரிகத்திற்கு பதிலாக இங்கு காட்டுமிராண்டித்தனம் கையாளப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
திரு மனோ கனேஷன் முந்தைய நல்லாட்சியில் நல்லிணக்க அமைச்சராக கடமையாற்றிருந்தார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைச்சராக இருந்தவர் பொறுமை இழந்து ஊடகவிழுமியங்களுக்கப்பால் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் சமூகத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் திரு மனோ கனேஸன் எம்.பி நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டுமென கேட்கிறேன்