சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 3 மணியளவில் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு பதவி விலகும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டதாகி விடும்.
அதிபராகப் பதவியேற்றதும் புதிய அமைச்சரவையை கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார்.