News Update :

Wednesday, October 9, 2019

TamilLetter

பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிக்க முகா தலைவர் முடிவு?



ஏ.எல்.சுபையிர்

விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல்கள் நடைபெற்ற போது தவிசாளரை தீர்மானிப்பதற்கான அதிகாரம் கட்சியிடம் இருந்தும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விருப்பு வாக்கின் அடிப்படையில் கடந்த காலங்களில் தவிசாளர் தெரிவு  மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இம்முறை வட்டார முறைமையின் கீழ் தேர்தல் நடைபெற்றுள்ளதால் கட்சியே நேரடியாக தவிசாளரை அறிவிக்க வேண்டிய காரணத்தினால் வட்டாரங்களை வெற்றி கொண்ட சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் பாரிய போட்டித்தன்மை அதிகரித்து காணப்பட்டதனால் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு கட்சித் தள்ளப்பட்டியிருந்தது.

பல இடங்களில் இப்படியான பிரச்சினை தோன்றினாலும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது ஒரு வித்தியாசமான முறையை முஸ்லிம் காங்கிரஸ் பின்பற்றியிருந்தது.

தவிசாளருக்கான போட்டியில் மூன்று பேர் போட்டியிட்டதாகவும் அதில் இரண்டு பேர் முன்னாள் தவிசாளராக இருந்தவர்கள் என்பதோடு மற்ற போட்டியாளர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதோடு அதிகாரங்கள் சமமாக பகிரப்பட வேண்டுமெனவும் இம் முறை ஏற்கனவே தவிசாளராக இருந்தவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமெனவும் இவருடைய நியாயமான வாதமாக இருந்தது.

தவிசாளருக்கான மும்முனைப் போட்டியை தனது தந்திரத்தின் மூலம் கட்சித்தலைமை இருமுனைப் போட்டியாக மாற்றி இரண்டு நபர்களுக்கும் தலா இரண்டு வருடம் தவிசாளர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார்.

இருந்த போதும் முதல் இரண்டு வருடங்கள் யார் என்பதில்  இரண்டு பேரும் விட்டுக் கொடுப்பில்லாமல் தனது பக்க நியாயங்களை முன்வைத்துக் கொண்டே சென்றனர்.

இறுதியாக குலுக்கல் முறையில் தவிசாளரை தெரிவு செய்வதென முடிவு செய்யப்பட்டு அம்முறையை பின்பற்றிய போது பிரதேச சபை உறுப்பினர் ரஹிம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இத் தெரிவை சற்றும் ஏற்றுக் கொள்ளாத மற்றைய போட்டியாளரான வாஸீத் தனக்கே முதல் இரண்டு வருடம் வழங்கப்பட வேண்டுமென மீண்டும் தலைமையிடம் விவாதத்தில் ஈடுபட்டார்.

மீண்டும் இன்னுமொறு முறை(இரண்டாவது) குலுக்கல் முறையை பின்பற்றுவதென இரண்டு பேரும் ஏற்றுக் கொண்ட போதும் இரண்டாவது முறையும் ரஹிம் அவர்களே தெரிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இருந்த போதும் கட்சியின் தலைமை முன்னாள் தவிசாளர் வாஸீத் அவர்கள் முதல் இரண்டு வருடங்கள்; தவிசாளராக பொறுப்பெடுப்பார் எனவும் அடுத்து வரும் இரண்டு வருடங்கள் ரஹிம் அவர்கள் தவிசாளராக நியமிக்கப்படுவார் எனவும் கட்சித் தலைமை பகிரங்கமாக அறிவித்திருந்தது.

இப்படியான பிரச்சினைக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தன்னகப்படுத்திய பிரதேச சபையின்  ஆட்சிக் காலம் இரண்டு வருடம் நிறைவுக்கு வருவதற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கத்தக்க மீண்டும் தவிசாளர் நியமனம் தொடர்பாக சர்ச்சை சூடுபிடித்துள்ளது.

இப் பிரச்சினையை கருத்தில் கொண்ட கட்சித் தலைமை அன்மையில் கண்டி மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் வைத்து முகாவின் உயர்பீட உறுப்பினர்கள் இருக்கத்தக்க தலைமை இது தொடர்பான ஒரு திர்மானத்தை அறிவித்திருந்தது.

நியாயமா பார்த்தால் ரஹிமுக்குத்தான் தவிசாளர் பதவியை வழங்கிருக்க வேண்டும் அன்றைய சூழ்நிலை என்னை தடுத்து விட்டது. அதன் காரணமாகத்தான் ஒழுக்காற்று நடவடிக்கை இவர் மீது எடுக்கவில்லை

இருந்தாலும் அந்த தவறை கட்சியின் தலைமை மீண்டும் செய்யாது.குறிப்பிட்ட காலத்தில் ரஹிம் தவிசாளராக நியமிக்கப்படுவார் என கட்சியின் தலைமை மீண்டும் வாக்குறுதி வழங்கியதாக எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் ரஹிம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-