அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் கல்லுாரியில் ஆசிரியராக கடமையாற்றும் ஏ.எல்.அஜ்மல் அவர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான குரு பிரதீபா பிரபா விருது இன்று(04) கொழும்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பொத்துவில்,அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை ஆகிய மூன்று கல்வி கோட்டங்கள் உள்ள நிலையில் 2019ம் ஆண்டுக்கான குரு பிரதீபா பிரபா விருதுக்கு அஜ்மல் ஆசிரியர் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தது அவர் வாழும் பிரதேசத்திற்கும் அப்பாடசாலைக்கும் பெருமையை சேர்த்துள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தேர்தலில் தைக்காநகர் வட்டாரத்தில் வெற்றி பெற்ற அஜ்மல் எதிர்கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு ஆளும்கட்சி உறுப்பினர்களை விட அதிகமான அபிவிருத்தி திட்டங்களை அமூல்படுத்திய உறுப்பினர் என்ற பெருமையும் அவர் பெற்றிருந்தார்.
அந்த அடிப்படையில் இவ்விருதை பெற்ற பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான ஏ.எல்.அஜ்மலுக்கு வாழ்த்துக்களை தமிழ் லெட்டர் இணையதளம் தெரிவித்துக் கொள்கின்றது.