கடந்த தேர்தலில் அன்னப் பறவைக்கு வாக்களித்ததன் மூலம் என்ன நடைபெற்றது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
இந்த முறையும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவைக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்ள அவ்வளவு சிரமமானதாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாச வீடு அமைப்பது தொடர்பில் மட்டுமே பேசுகின்றார். அவர் நாட்டின் பொருளாதாரம் பற்றிப் பேசவில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒரு வசனம் தானும் கருத்துத் தெரிவிக்கவில்லை. நாட்டின் அபிவிருத்தி குறித்து எந்தப் புரிதலும் அவருக்கு இல்லை. அதனைப் பற்றி அவர் எந்தவொரு கருத்தும் இதுவரையில் தெரிவிக்கவும் இல்லையெனவும் அவர் மேலும் கூறினார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற வர்த்தகர்களுடனான விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.