News Update :

Tuesday, September 17, 2019

TamilLetter

சட்டத்தரணி கபூரின் சாபத்தை சுமக்கும் முஸ்லிம் காங்கிரஸ்

           



அரசியலில் அநாதையாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை பெருந்தலைவர் அஷ்ரபோடு உறுதுணையாக நின்று உருவாக்கியவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது செயலாளராக தலைவர் அஷ்ரபால் இனம்காணப்பட்ட சட்டத்தரணி கபூர் கட்சியின் வளர்ச்சிப் பாதைக்கு பாரிய அளவிலான பங்களிப்பை செய்து இவ் இயக்கத்தை சமூகமயப்படுத்தினார்.

ஆரம்ப காலகட்டத்தில் நாடு பூராகவும் கள அரசியலில் ஈடுபட்டுவந்த சட்டத்தரணி கபூர் அவர்கள்;  அரசியல் சித்தாந்தத்தின்;;; மூலஉபாயங்களை கையாண்டு கட்சியை தேசிய சர்வதேச ரீதியில் இட்டுச் சென்று அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டார்.

சட்டத்தரணி கபூர் அவர்களின் ராஜதந்திர செயற்பாடும் மொழி ஆள்கையும் பெருந்தலைவர் அஷ்ரபை தினமும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திய சம்பவங்கள் வரலாற்று பதிவுகளாகவே பார்க்கப்படுகின்றன.

புத்திஜீவிகளுக்கும்,துறைசார்ந்தோரையும் உள்ளீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல்pல் கட்சியின் முதலாவது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி கபூரின் பெயர் தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பட்டியலில் சட்டத்தரணி கபூர் அவர்களின் பெயர் அச்சிட்டு செய்தியாக வருவது வாடிக்கையான வேடிக்கையாக போய்விட்டது.

அதுமட்டுமல்ல அதிக தடவைகள் தேசியப்பட்டியலுக்காக பருந்துரைக்கப்பட்ட பெயராக இலங்கை வரலாற்றில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் சாதணை படைத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

தமது வாழ்வின் இறுதிக் காலத்தை எட்டிக் கொண்டிருக்கும் சட்டத்தரணி கபூர் அவர்களை சுமார் 35 வருட காலமாக மனிதபிமானமற்ற முறையில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இன்னும் எப்படி இவரை ஏமாற்றிவிடலாம் என்பது தொடர்பாகவே சிந்தித்து மனித நேயத்திற்கு எதிராக சவால் விடுகின்றது.

ஏமாற்றத்தின் காலம் அரை நூற்றாண்டை தொடரப்போகும் நிலையிலும் கூட நம்பிக்கையை கைவிடாமல் இன்றும்  கொழும்பில் நடைபெரும் உயர்பீட கூட்டத்திற்கும் வேறு நிகழ்வுகளுக்கும் தனது சொந்த செலவில் சென்று கலந்து சிறப்பித்து புன்னகையோடு ஊர் திரும்புகின்ற நாகரிகம் யாருக்குமே இருக்காது.

ஊடக நேர்காணலுக்கு அழைக்கும் சந்தர்ப்பத்தில் நான் உண்மையை கூறவேண்டிவரும் இதனால் பலபேர் பல சங்கடங்களுக்கு ஆளாகிவிடுவார்கள் ஆதலால் என்னை ஊடக நேர்காணலுக்கு அழைக்காதீர்கள் என்று அன்போடு மறுப்பது பன்பின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது.

புதிதாக சமூகத்தை காக்க வந்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் முதுகில் பயணம் செய்து மக்களை மிதித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எனும் அடையாளம் தந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளரும்; பிரதித் தலைவருமான சட்டத்தரணி கபூர் இன்னும் ஏமாற்றப்பட்டும் நபராகவே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-