ஏ.எல்.நஸார்
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமா? என்ற சந்தேகம் வலுத்த நிலையிலும் தனது அரசியல் எதிர்காலம் எப்படி அமையுமென்ற அச்சத்தினாலும் தனது இருப்பை தக்கவைப்பதற்கான ஏற்பாடாக தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான முடிவை அவர் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இப் பாராளுமன்ற உறுப்பினரின் புலம்பலை நாடிபிடித்த தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு பேச வைத்துள்ளதாக ஒரு சிலர் பேசிக் கொள்கின்றனர்.
அக்கரைப்பற்றில் சுமார் 20ஆயிரம் வாக்குகளோடு மாவட்டத்திலுள்ள 10ஆயிரம் வாக்குகளையும் சேர்த்து 30ஆயிரம் வாக்குகள் தேசிய காங்கிரஸின் அடிப்படை வாக்குகள் எனவும்.தாங்கள் தேசிய காங்கிரஸோடு இணையும் பட்சத்தில் தங்களது பிரதேசத்தின் வாக்குகள் சுமார் 10ஆயிரத்தோடு வேறு பிரதேசங்களிலும் மேலதிகமாக பல ஆயிரம் வாக்குகளும் தமது கட்சியால் பெறமுடியும் எனவும். மேலும் செல்வாக்குள்ள வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பொதுத்தேர்தல் வந்திருந்தால் நான் இன்றே இணைந்து கொண்டிருப்பேன் ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ளதால் எந்த வேட்பாளர் வெற்றி பெருவார் என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றது. அதனால் பொறுத்திருந்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.