News Update :

Sunday, September 29, 2019

TamilLetter

நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்


ஏ.எல்.றமீஸ்
இலங்கை திரையரங்குகளில் இந்த வாரம் வெளியிடப்பட்ட திரைப்படம் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

சிவகார்திக்கேயனின் தொடர்ச்சியான மூன்று தோல்விப் படங்களிற்கு பிறகு வெளிவரும் இத் திரைப்படத்தின் வெற்றி வாழ்வா சாவா என்ற நிலையை   சிவகார்த்திகேயனுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கிராமிய மண்வாசனையோடு கதையை தொடங்கியிருக்கிறார் இயக்குணர் பாண்டியராஜ்.

தனது நண்பனுக்காக வாழும் அப்பாவும் இறந்துவிட தனது அப்பாவின் நண்பனுடைய துளசி எனும் மகளை தன் தங்கையாக ஏற்று தன் தங்கையின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறார் என்பதே கதையின் கரு

ஆனந்தம்,கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களை பார்ப்பது போல் இருக்கிறது படம். பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரிந்து நின்பதும் அவர்களை ஒன்றிணைக்க அவமானப்படும் நாயகனாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் கதாநயகன்
நகைச்சுவையை மட்டும் நம்பி களமிறங்கிய கதாநாயகனாக இருந்தாலும் அதைமாற்றும் முகமாக பொறுப்பான குடும்பத்து இளைஞனாக தன் இமேஜை உருவாக்க முயன்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
 
.சூரி, யோகிபாபு ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்கின்றனர் ஆனால் இவர்களுடைய பாத்திரத்திற்கு பதிலாக இன்னும் வலுவானவர்களை களத்தில் இறக்கியிருந்தால் கூடுதல் பலம்
படத்தின் நாயகிக்கு பெரிதாக இயக்குனர்  வேலை கொடுக்கவில்லை மாறாக காதல் காட்சிகளில் மட்டும் வந்து போகும் நபராகவே உள்ளார்.
தங்கச்சியாக  (துளசியாக) வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்புத்திறமையால் கதையின் ஆணிவேராக இருப்பதோடு  படத்தை நகர வைப்பதில் வெற்றி கண்டுள்ளார்.
படத்தின் பாடல்கள் எங்கேயோ கேட்டமாதிரி இருந்தாலும் ஒன்றிரண்டு பாடல்களை கேட்கும்படியாக இசையமைப்பாளர் டி இமான்  பார்த்துக் கொண்டுள்ளார். 
மொத்தத்தில் ஒருதரம் பொழுது போக்கிற்காக பார்க்கலாம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-