News Update :

Saturday, September 28, 2019

TamilLetter

நான் ஓய்வு பெறவே மாட்டன், - இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன



ஒழுக்கமான நாட்டை கட்டியெழுப்புவதுடன்  குழந்தைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே எனது நோக்கம். எனவே நான் ஓய்வு பெற மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (28) பொலனறுவையில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும்,

ஓய்வு பெறும் தேவை எனக்கில்லை. நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான செயற்றிட்டங்களை தொடர நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. எனது கதை இத்துடன் முடிந்துவிட்டதாக சிலர் நினைக்கலாம். ஆனால் டிசெம்பருக்குப் பிறகு வரும் பெரும் மாற்றத்தில் நாட்டின் அபிவிருத்தியுடன் பொலனறுவை அபிவிருத்தியையும் நான் மேற்கொள்வேன். - என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-